Namvazhvu
வேதியர் சந்தியாகு ஞாயிறு தோழன் - பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு (03.02.2019)
Wednesday, 13 Mar 2019 11:49 am
Namvazhvu

Namvazhvu

திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்குரியவர்களே, ‘கொண்டவன் கூட இருந்தால் கூரை ஏறிச் சண்டை போடுவேன்‘ என்பது நன்கு பரிச்சய மான சொலவடை வாக்கியம். ஆம். இதுஇன்றைய திருவழிபாட்டு வாசகங்களோடு மிக நெருங்கிய தொடர்புடையது. இளம் வயதில் இறைவாக் கினராக அழைக்கப்பட்ட எரேமியாவுடன்கடவுள் இருந்த காரணத்தால் தனதுஇறைவாக்குப் பணியை எரேமியா செம்மையாகச் செய்து முடித்தார். கடவுளின் வெளிப்பாடான ‘அன்பை’யார் பக்கபலமாகவும், தக்க துணையாக வும் கொண்டிருக்கிறார்களோ அவர் களால் இயலாத காரியம் எதுவுமில்லை. அதுபோலவே, நம் ஆண்டவர் இயேசுவின் சாதனைகள், வெற்றிகள் அனைத் தின் பின்புலமாக இருப்பது அவர் தந்தையோடும், தந்தை அவரோடும் இணைந்திருந்ததுதான் என்பது வெள்ளிடைமலை. நாம் நமது வாழ்வில் தனிமை, துன்பம், வறுமை, நோய், சோதனை, போன்ற சூழ்நிலைகளில் நம்மோடு கடவுள் இருக்கிறார் என்பதைமறத்தலாகாது. சொலவடை சொல்வதுபோல சண்டை போன்ற எதிர்மறையானசெயல்களுக்காக இல்லாமல் வாழ்வு,வளமை, நன்மை போன்ற நேர்மறை யான செயல்களுக்கு இறைவனது உடனிருப்பை நாடுவதும் அவசியமாகும். நமது செயல்கள் அனைத்தும்மிகுந்த பலனளிக்கும் விதத்தில் அமையவும் சொந்த ஊரிலும் பிற இடங்களிலும் நமது பணிகள் ஏற்றுக் கொள்ளப்படவும் இத்திருப்பலியில் உருக்கமாக வேண்டுவோம். அத்துடன் இந்த வாரத்தில் நினைவு கூரப்படும் ‘உலக  நோயாளர் தினம்‘ எல்லாரும் நலமுடன் வாழ வழிவகுக்கவும் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: எரேமியா 1:4-5, 17-19

ஒருவரைக் கடவுள் தம் பணிக்கு அழைக்கும்போது அவருடன் பயணிக்கிறார். தமக்குக் கீழ்படிந்துபணியைச் செவ்வனே செய்யாதபோது கலக்கமுறச் செய்வார். இல்லாமை, இயலாமைபோன்ற எந்தக் குறையும்இல்லாமல் கடவுள் எரேமி யாவைக் செயல்படவைப்பதை விளக்கும் முதல் வாசகத்துக்குச் செவி சாய்ப்போம்.

பதிலுரைப்பாடல்: 71:1-2, 3-4அ, 5-6 அஆ, 15,17.

பல்லவி: என் வாய் நாள் தோறும் உமத மீட்பை எடுத்துரைக்கும்

இரண்டாம் வாசக முன்னுரை:

1 கொரிந்தியர் 12:31-13:13

அன்பு செய் பிறகு அனைத்தையும் செய் என்பது புனித அகுஸ்தின் வாக்கு. ஆம் உண்மையான அன்பை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துபவர்களால் நன்மையைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பது மேலோரின் எண்ணம்.

அன்பை எப்படி வகைப்படுத்தலாம் என்றும் அது எவற்றை விட எப்படியெல்லாம் சிறந் தது என்றும் திருத்தூதர் பவுல் விளக்கி உரைப்பதை இரண்டாம் வாசகத்திலிருந்து கவனமாய் கேட்போம்.

நற்செய்தி: லூக்கா 4:12-31

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்

1. அன்புடன் எம்மை அழைக்கும் வானகத் தந்தையே இறைவா!

எம் திருஅவையை வழிநடத்தும் தலைமைப் பணியாளரான திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், துறவியர், குருக்கள் மற்றும் திருநிலையினர் அனைவரும் தாங்கள் பணிக்கு அழைக்கப்பட்ட சூழலையும் நோக்கத்தையும் உணர்ந்தவர்களாய் தங்கள் அழைத்தலை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.

2. கனிவு மிக்க இறைவா!எங்கள் தாய் நாட்டை வழிநடத்தும் தலைவர்களும் அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்தைத் தவ றான வழிகளில் பயன்படுத்தாமல், எங்களது உணர்வுகளுக்கு மதிப் பளித்து, குறிப்பாக இயற்கை வளங்களைப் பாதுகாத்து எங்கள்வாழ்வாதாரங்களைப் பெருக்கு வதில் அக்கறைகாட்ட வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புத் தந்தையே இறைவா!அன்பே அனைத்திற்கும் மேலானது என்றும் அதுவே ஆணிவேரும் அடித்தளமுமாய் இருக்க வேண்டும் என்றும் உமது வாக்குகள் கூறுகின்றன. எங்கள் இல்லம்,பங்கேற்பு அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களில் உண்மையான அன்பை வளர்க்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் ஈடுபட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. நன்னலம் நல்கும் நாயகரே இறைவா!இந்த வாரத்தில் நாங்கள் கொண்டாடும் உலக நோயாளர் தினத்தின் பயனாக உடல், உள்ளப் பாதிப்புகளுக்கு உள்ளாகிபோதிய மருத்துவ உதவிபெற வழியின்றி துன்புறும் நோயாளர் கள் அனைவருக்கும் மாபெரும் மருத்துவராகிய நீரே உடனிருந்து, தேவையான அனைத்தையும் வழங்கி அவர்களை ஆதரித்து நன்னலத்தை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

5. அகரமும் னகரமுமான இறைவா!தமிழகத் திருஅவை இந்த பிப்ரவரி மாதத்தை இலக்கிய மாதமாகக் கொண்டாடுகிறது. இவ்வேளையில் தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வாரஇதழாக உள்ள நம் வாழ்வு வாரஇதழையும் ஏனைய மறைமாவட்டமாத இதழ்களையும் இறைமக்களாகிய நாங்கள் வாங்கி வாசித்து விழிப்புணர்வு பெறவும்புதிய திருஅவையை கட்டி யெழுப்பவும் வரமருள வேண்டுமென்று  உம்மை மன்றாடுகிறோம்.