Namvazhvu
யூஜின் முத்து சே.ச. FREE E-Book பெருந்தொற்றுக்குப்பின் வாழ்வு – திருத்தந்தை பிரான்சிஸ்
Saturday, 18 Jul 2020 11:37 am
Namvazhvu

Namvazhvu

கார்டினல். மைக்கேல் ஜெர்னி சே.ச.

2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த மானுட சமூகத்தையே வளைத்துப்பிடித்துக் கொண்டிருந்த சூழலில் நாம் என்ன செய்வது? ஏது செய்வது? என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரக்கச் சிந்தித்து வந்தார்கள். 2020 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதியிலிருந்து  ஏப்ரல் 22 ஆம் தேதி வரை  அவர் பேசிய மற்றும் எழுதியவற்றில் மிகப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துக் கொடுக்கின்றோம். 
அவர் யார் யாரிடம், எவ்வாறு பேசினார்? அவர் என்ன சொன்னார்?ஏன் அப்படிச் சொன்னார்? எங்கே சொன்னார்? எப்போது சொன்னார்? என்பதையெல்லாம் தாண்டி கீழ்க்காணும் எட்டுப் பகுதிகளையும் அவரது ஒருமித்த சிந்தனை வெளிப்பாடாகக் கருதி நாம் வாசிக்கலாம். இந்த மண்ணில் வாழும் அனைவருக்கும் அவரிடம் இருந்து வரும் செழுமைமிக்கச் செய்தியாக நாம் இவற்றை ஏற்றுக்கொள்ளலாம்.
இரண்டு காரணங்களுக்காக நாம் இவற்றை இங்கே தொகுத்து வழங்குகின்றோம். ஒன்று, மானுடம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அவலத்தில் இருந்து விடுபட்டு, இன்றைக்கு உள்ளதைவிட மேம்பட்ட ஒரு உலகத்தை கட்டி எழுப்பிட நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதற்கான பாதையையும் பயணத்தையும் சுட்டிக்காட்டி புதிய வாய்ப்புகளுக்கான வாசல்களைத் திறந்துவிடுவதற்காகவும் இரண்டாவதாக, கணக்கிடமுடியாத துன்பதுயரங்களுக்கும், இழப்புகளுக்கும் மத்தியில் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போலத் தவிக்கும் நேரத்தில் மக்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பதற்காக. திருத்தந்தை அவர்கள் மனிதத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு நிச்சயமாக அவரது இறை நம்பிக்கையே அடித்தளமாக இருக்கின்றது என்பதற்காகவும் நாம் இவற்றைத் தொகுத்து வழங்குகின்றோம். “கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரென்றால் வாழ்வு ஒட்டுமொத்தமாக முடிந்து போக முடியாது.”
 இந்தத் தொகுப்பினை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குழுவிற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ’ஊருக்கும் உலகிற்கும்’ சொல்வது இதுதான்: “நான் உங்களுக்காக செபிக்கிறேன், நான் உங்களோடு செபிக்கிறேன், நமது தந்தையாகிய இறைவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும், உங்களை தமது அன்பால் நிரப்ப வேண்டும், நீங்கள் இந்தப் பாதையில் நடக்க உங்களைப் பாதுகாக்க வேண்டும், நீங்கள் ஒருபோதும் ஏமாற்றம் அடையாது, தொடர்ந்து நிமிர்ந்து நடைபோட நம்பிக்கை என்னும் ஆற்றலை உங்களுக்குத் தரவேண்டும் என்று ஆசையோடு அவரிடம் வேண்டி நிற்கின்றேன்”.  

மொழி பெயர்ப்பாளர் உரை 
நண்பர்களே, 
“இந்தத் திருத்தந்தையை எல்லோருக்கும் பிடித்திருக்கின்றது. கத்தோலிக்கத் திருச்சபைப் பக்கம் எட்டிப்பார்க்காத இளைஞர்களுக்குக்கூட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பேச்சும் செயலும் பிடித்துப் போய்விட்டது. இவர் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று எனது சின்னம்மா சகோ. ஸ்டெல்லா மேரி CIC அவர்கள் கூறினார்கள். அப்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொறுப்பேற்று ஒருசில வாரங்களே ஆகியிருந்தன. 
சில ஆண்டுகளுக்குப் பின் ‘அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு’ என்ற, உலகெங்கும் இருந்து குழந்தைகள் அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அளித்த பதில்கள் அடங்கிய ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்யும் பணியினை, அருட்தந்தை. ஸ்டீபன் மார்ட்டின் சே.ச. அவர்கள் எனக்கு வழங்கினார்கள். 
இப்போது, கொரோனா பெருந்தொற்றுச் சிக்கலில் துன்புறும் மக்களின் அருகில் இருந்து ஆறுதல் சொல்லுகின்ற, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காக்கப் போராடும் பலரையும் ஊக்குவிக்கின்ற, பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின் நமது வாழ்வு எப்படி அமைந்தால் அது அனைவருக்கும் நலம் பயப்பதாக இருக்கும் என்று வழிகாட்டுகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுக்கும் பேற்றை நம் வாழ்வு ஆசிரியர் அருட்தந்தை. குடந்தை ஞானி அவர்கள் எனக்கு வழங்கியிருக்கின்றார்கள். 
தூய இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளிலே என்னை வழிநடத்தி, கத்தோலிக்கத் திரு அவையையும், திருத்தந்தையர்களையும் அன்புசெய்யவும் மதிக்கவும் கற்றுத்தந்த அருட்தந்தை. டொனேட்டஸ் ஜெயராஜ் சே.ச அவர்களுக்கு இந்தப் படைப்பை காணிக்கையாக்குகின்றேன்!
நெகிழ்ந்த நெஞ்சத்துடன், 
யூஜின் முத்து சே.ச.

T0 Read this Free E-Book, Click : https://www.namvazhvu.in/magazine/magazine/1033/FREE-E-Book------

or Click this Picture

<input alt="" src="https://www.namvazhvu.in/magazine/magazine/1033/FREE-E-Book------" type="image" />