இணையவழி வகுப்பும் விளிம்புநிலை மக்களும்
கொ ரோனாவால் இந்தியாவில் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் மறுதேதி குறிப்பிடா மல் கல்வி நிலையங்கள்மூடப்பட்டுள்ளன. மார்ச் 26 ஆம் தேதியே மத்திய பள்ளிக் கல்விக் குழு (CBSE) தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 23000 பள்ளிகளுக்கு “Lockdown - A Golden Opportunity for Education” என்ற சுற்றறிக்கை வழி மாணவர்கள் கல்வி இணையதளங்களை பயன் படுத்தி தங்களுடைய திறமை களை வளர்த்துக்கொள்ளவும், ஆசிரியர்கள் இணையவழியில் பாடம் நடத்துவதற்கு தேவையான திறமைகளை வளர்த்து கொள்ளவும் வலியுறுத்தியது. உயர்கல்வி தொடர்பான பல் கலைக்கழக மானியக் குழுவும் (UGC) வருங்காலங்களில் Covid-19 போன்ற சூழலை எதிர்கொள்ளும் விதமாய் மொத்த பாடத்தில் 75ரூ-த்தை வகுப்புகளிலும், 25ரூ-த்தை இணையதளம் வழியாகவும் நடத்தவும் ஆலோசனை கூறியது.
தற்பொழுது இந்தியாவில் Zoom, Google class room, Whatsapp செயலிகள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆங்காங்கே வகுப்புகள் நடைபெறுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு 700 கல்லூரிகள் இணையதள வாயிலாக பாடங்களை நடத்தCoursera என்கிற தனியார் இணையக் கல்வி தளத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், BYJU’S-ன் இணையவழி கல்வியில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 200 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை வளர்ச்சி என்று நினைத்து மகிழ்வதா? இல்லை சமூக ஏற்றத்தாழ்வின் உச்சம் நீள்கிறது என்று நிராகரிப்பதா?
கண்களை அகல விரி
நகைகளை அடகு வைத்து செல்போன் வாங்கிக் கொடுத்த பெற்றோர்; முதல்ல ரொம்ப ஆர்வமா இருந்தாங்க பிள்ளைங்க. இப்ப ஐஞ்சு பேரு, ஆறுபேருதான் கிளாஸ் அட்டன் பண்றாங்க…என புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்; எப்பவுமே செல்போன்ல இருக்கிறதுனால அடிக்கடி தலைவலின்னு கஷ்டப்படுறா என மகளுக்காய் வேதனைப்படும் தாய்; புரியுதோ புரியல்லையோ. அத அப்புறம் பார்த்துக்கலாம். எப்படியாவது கிளாஸ் நடக்கட்டும். அப்பதான் பீஸ் கலெக்ட் பண்ண முடியும் என்கிற பள்ளி நிர்வாகங்களின் கிசுகிசுப்புகள்;பீஸ் கட்டிட்டீங்கண்ணா ஒரு பாஸ்வேர்ட் உங்க செல்போனுக்கு வரும். அப்புறம் உங்க பிள்ளை ஆன்லைன் கிளாஸ்ல சேர்ந்திடலாம் என கெடு வைக்கும் பள்ளிகள்; எங்க பிள்ளைகளுக்கு இப்ப ஆன்லைன் கிளாஸ். ஒங்க பிள்ளைகளுக்கு அப்பிடி ஒண்ணும் இல்லியா என பிறரைச் சிறுமைப்படுத்தும் உரையாடல்கள்; ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கித்தர வாய்ப்பில்லை என்கிற மனஅழுத்தத்தில் உயிரை மாய்த்த கடலூர் விக்னேஷ், திண்டுக்கல் பிரதீப், உளுந்தூர்பேட்டை நித்தியஸ்ரீ, ஆண்டிப்பட்டி அபிஷேக்...…
கணினி, செல்போன் இல்லாச் சூழல். அவை இருப்பினும் அவற்றிற்கு ரீசார்ஜ் செய்ய வசதியின்மை. ரீசார்ஜ் செய்தாலும் சிக்னலில் சிக்கல்கள். இத்தனையும் தாண்டி காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள். நடுத்தர குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் சூழலில் பிள்ளைகளை யார் கவனிப்பார்? எலக்ட்ரானிக் பொருட்களை குழந்தைகளிடம் ஒப்படைத்துவிட்டு எப்படி தைரியமாக வேலைக்கு செல்வது? எவ்வளவு பேரால் உடனே சில ஆயிரங்களைச் செலவு செய்து ஆன்ட்ராய்டு போன், மடிக்கணினி வாங்க இயலும்? ஆன்லைனில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள் படும்பாடு பெரும் வேதனை; ஏதோ கடமைக்கு நடத்துகிறார்கள். தொடர்ந்து திரையையே பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர் - ஆசிரியர்களின் விழித்திரை என்னவாகும்? இப்படியே போனால் உடலென்ன ஆகும்? பிள்ளைகள் ‘‘yes’ ‘Bye’ ‘மேம்’ மட்டும்தான் சொல்கிறார்கள். ஒன்றையும் முழுமையாகக் கற்பிக்கவோ விளங்க வைக்கவோ முடியவில்லை. தனியார் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறார்கள். எனவே நாம் நடத்தாவிட்டால் என்ன சொல்வார்கள். எனவே, விரைவில் அரசு பள்ளிக் கூடங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பமாகும் என தொக்கி நிற்கும் அரசின் அறிவிப்புகள். ஆக, உடல் ரீதியாக, மனரீதியாக, பொருளாதார ரீதியாக, அறநெறி வாழ்வியல் ரீதியாக சவால்கள் நிறைந்ததாகவே தற்போதைய இணையவழி கற்றல் தொடர்கிறது.
கற்பித்தலுக்குப் பின் உள்ள சூட்சுமம்
வளர்ந்த நாடுகள் ஏற்கெனவே இணையவழி கற்றல்முறைக்கு பழக்கப்பட்டவை. அதற்குரிய தகுந்த கட்டமைப்பு வசதிகளை இந்நாடுகள் உருவாக்கியுள்ளன. ஓர் உதாரணம் சீனா. அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சில வாரங்களிலே இணையவழி கற்றல் தொடங்கியது. ஆகான் மாகாணத்தி லுள்ள பள்ளி மாணவர்களில் மட்டும் 81ரூ பேர் (7,30,000 மாணவர்கள்) Tencet K-12 online school என்ற இணையதள வகுப்பின் வாயிலாக பயிற்றுவிக்கப்படுகின்றனர். நமக்கோ தேவையான போதிய இணைய தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. கல்வி பற்றிய 2017-18 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSSO – 75” round on education) இந்திய குடும்பங்களில் 23.8ரூ குடும்பங்களில் மட்டுமே இணையதள வசதி உள்ளது. வெறும் 11ரூ குடும்பங்களில் மட்டுமே ணிப்பொறி, மடிக்கணினி போன்றவை உள்ளன. 8ரூ குடும்பங்கள் மட்டுமே கணிப்பொறி மற்றும் இணையதள வசதி இரண்டையும் பெற்றுள்ளன. இந்நிலை யில் இணையவழி கற்றல் எல்லோர்க்கும் இங்கு எப்படி சாத்தியப்படும்?
அறிவீனர்களையும், கரிசனையற்றவர் களையும் ஆட்சியாளர்களாகக் கொண்டிருக்கும் இந்தியாவில், குறிப்பாக நம் தமிழகத்தில் எதிலும் தெளிவில்லை. அறிவுப்பூர்வமான அணுகுமுறையில்லை. எனவேதான் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அறிவிப்புகளும், குழப்பங்களும் நீள்கிறது. மாணவர் சமூகத்தைக் குழப்பிக்கொண்டே தங்களது பார்ப்பனத் திட்டங்களைபுதிய கல்விக் கொள்கை என்கிற ரீதியில் தீட்டிக் கொண்டிருக் கிறது மத்திய அரசு; மாநிலமே அடுத்து நாற்காலியில் அமர்வது யார்? என்கிற உட்கட்சி பூசலில் உருண்டு கொண்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது தராணசாமானியர்கள் என்றால் மிகை யல்ல. அடிப்படைக் கல்வியை எல்லார்க்கும் கொடுக்கும் திட்டத்தைவிட கல்வி பெயரில் களவாணிகளோடு கைகோர்க்கும் திட்டங்கள் தான் இங்கு வேகமாக அரங்கேற்றம் காண்கிறது. ஏற்கெனவே வேலைவாய்ப்பின்மையால் தொடரும் ஏழ்மையும் வறுமையும் ஏறுமுகத்திலிருக்க, கூடுதலாக கொரோனா தந்திருக்கும் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் இணையவழிக் கல்வியை மத்திய மாநில அரசுகள் ஊக்குவிக்கிறது எனில், அதற்குப் பின்னாலிருக்கும் சூட்சுமத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதம் நமது நிதியமைச்சர் NIRF தரப்பட்டியலில் முதல் 100 கல்லூரிகள் பட்டப்படிப்புகளை இணையவழியில் வழங்கு வதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அந்த முதல் 100 கல்லூரிகளில் 75 கல்லூரிகள் மத்திய மாநில அரசால் நடத்தப்படுகின்ற ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள். இக்கல்லூரிகளுக்கு இணையவழி படிப்புகளுக்கான ஒப்புதல்வழங்குவதன் மூலம் அரசு வழங்கி வந்த நிதியை இனி அரசு நிறுத்திவிடும்; உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான நிதியை தாங்களே ஈட்டிக் கொள்ள வேண்டும். இதுவேபள்ளிக் கல்விக்கும் புதிய கல்விக்கொள்கை பெயரில் நிகழவிருக்கிறது. சுருங்கக் கூறின், மனித அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வியை எல்லார்க்கும் வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தன்னை படிப்படியாக விடுவித்துக் கொள்ளும்; தனியார் கல்வி முதலாளிகள் குறைவான ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி கல்லூரி களை இயக்குவார்கள். தாங்கள்விரும்பிய கல்வி கட்டணங் களை நிர்ணயம் செய்வார்கள். முதலாளித்துவ நாடுகளில் இதுதான் நிகழ்கிறது. வகுப் பறைகள் குறைவு, கல்லூரி பராமரிப்புக்கான செலவுகள் இல்லை, குறைவான ஊழியர் கள் மற்றும் பேராசிரியர்கள் என மிகக் குறைவான முதலீட்டில் மிக அதிக லாபத்தை அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் ஈட்டு கின்றன.
பல்கலைக் கழகங்கள் மட்டுமின்றி Coursera, Udacity, Biju’s போன்ற MOOCs தளங்கள்,மென்பொருள் - இணைய சேவை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களும் லாபத்தை பங்கிடுவர். பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட BYJU’S உலகிலேயே அதிக மதிப்புள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனம். 2020 ஜனவரியில் இந்நிறுவனத்தின் மதிப்பு எட்டு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. உலகளவில் கல்வி தொழில் நுட்பச் (Edu Tec) சந்தையில்செய்யப்பட்டுள்ள முதலீடு 18.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது2025-க்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும்என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கல்வி தொழில்நுட்பச் (Edu Tec) சந்தையின் மதிப்பு 2021-ல் 1.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்கிறது கூகுள். கொரோனா ஊரடங்கும் இதற்கு காரணமாம்.
கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இணையவழி கற்றலின் தாக்கங்கள் மற்றும் புதிய கல்விக்கொள்கை கொண்டு வந்திருக்கும் பேதமைபோன்றவற்றால் முந்தைய காலங்களைப் போலவே ஒருவருடைய சாதிய - சமூக - பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு தகுந்தாற் போலவே கல்வி கிடைக்கும் வாய்ப்பு பெருகுவதை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? மாணவர்களின் பாடச் சுமைகளை 30ரூ அளவிற்குக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாநிலப் பாடத்திட்ட புத்தகங்களில் திப்புசுல்தானின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளை கடந்த ஜூலை 27 ஆம் தேதி கர்நாடக அரசு நீக்கியது. இதுபோன்ற சூழ்ச்சிகள் இலைமறைக்காயாய் தொடர்வதை எப்படி நாம் பொறுத்துக் கொள்ள இயலும்? நம் இந்தியக் குடும்பச் சூழல், பொருளாதாரம், தொழில்நுட்ப வசதிகள் என எதுவும் இணைய வழி கற்றலுக்கோ, அனைவருக்கும் கல்வி என்கிறசமத்துவ உரிமையைக் காக்கவோ உதவாது என்பதனை உணர்ந்து நாம் எதிர்த்திடுவோம். அடிப்படைக் கல்வியை, அனைவர்க்கும் கல்வியை ஆதரித்து செயல்படுவோம்!