ஞாயிறு தோழன்
பொதுக்காலம் - 6 ஆம் ஞாயிறு
வேதியர் சந்தியாகு
திருப்பலி முன்னுரை: கிறிஸ்துவில் பேரன்புக்கு உரியவர்களே, இன்று எங்கு பார்த்தாலும் போதனை மயம். அதனை வழங்குபவர்களுக்கென்று எந்தத் தகுதியும் வரையறுக்கப்படவில்லை. அப்போதனை களைப் பரப்பிட அச்சு, காட்சி ஊடகங்கள் ஏராளம். ஆனால் கிறிஸ்து மானிட உடலோடு இறை யாட்சிப் பணியை முழு வீச்சுடன் ஆற்றிய அந்தக் காலக் கட்டத்தில் மலைகளில், சமவெளிகளில், கடற்கரைப் பகுதிகளில் பல அரும் அடையாளங்களை நிகழ்த்தி,
நிலைவாழ்வு தரும் வார்த்தை களை, வாழ்க்கைமுறையைப் பல எடுத்துக்காட்டுகளுடன் அவர் போதித்தார். அதில் ஒன்றுதான் இன்றைய நற்செய்திப் பகுதி யாக வழங்கப்பட்டுள்ளது. பொது வாகப் போதனைகளை மக்கள் மூன்று கண்ணோட்டத்தில் பாhக்கின்றனர். ஒன்று, இப்போதனை யின் செயல்பாட்டுக் கருத்து என்ன? இரண்டு, இதனை வழங்குபவர் தம் வாழ்வில் கடை பிடிக்கின்றவரா? மூன்று, இப்போதனையை நாம் பின்பற்றா விட்டால் நமக்கு வரும் இழப்பு என்ன? இக்காலத்திலும் இறையாட்சியின் முழக்கங்களாகத் திரு அவை பல்வேறு வழிமுறைகளில் போதனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அவை முறையே: அதிகாரப்பூர்வமான ஆவணங்கள், திருத்தூது அறிவுரைகள், வழி பாட்டுக் கொண்டாட்டங்கள், மறையுரைகள் மேலும் சமூகத் தொடர்பு ஊடகங்கள் என வகைப்படுத்தலாம். ‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற அய்யன் திருவள்ளு வரின் குறள்நெறிப்படி நாம் போதனைகளைக் கூர்ந்து கேட்க வும், நல்லனவற்றை ஏற்றுக் கடைபிடித்து நிலைவாழ்வின் உரிமையாளர்களாகவும் இத்திருப்பலியில் அருள்வேண்டி ஆர்வத்துடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை: எரேமியா 17:5-8 யார் சபிக்கப்படுவர்? யார் பயனடையார்? யார் தீமை தரும் நிலத்தில் குடியிருப்பார்? யார் பேறு பெற்றோர்? அவர்களது வாழ்வு எப்போது கனி கொடுக்கும்? என
இறைவாக்கினர் எரேமியா குறும் பட்டியல் தருகிறார். இதனை இன் றைய முதல் வாசகத்தில் கேட்கும் நாம் நமது வாழ்வைக் கனி கொடுக்கும் விதத்தில் அமைத்துக் கொள்வோம்.
பதிலுரைப் பாடல்:
திருப்பாடல் 1:1-2, 3,4,6
பல்லவி: ‘ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர் பேறு பெற்றவர்’
இரண்டாம் வாசக முன்னுரை:
1 கொரிந்தியர் 15:12,16-20
கிறிஸ்தவ மதத்தின் அடிப் படை மறைக்கோட்பாடுகளுள் ஒன்று,
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படுதல். அவர் உயிருடன் எழுப்பப் படவில்லையென்றால் நமது நம் பிக்கை வீணானது என்பதையும் கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டது அனைவரும் இறப்புக்குப் பின் உயிருடன் எழுப்பப்படுவர் என்ப தற்கு உறுதிப்பாடு எனவும் போதிக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.
நற்செய்தி வாசகம்: லூக்கா 6:17, 20-26
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள் 1. நல்ல போதனைகளை நாளும் வழங்கும் இறைவா!
எம் திருஅவைப் பணியாளர்களான திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் திருநிலையினர் அனைவரும் தாங்கள் வழங்கும் அதிகாரப்பூர்வ மான போதனைகளை எல்லாருக்கும் நன்றாகப் புரியும்விதத்தில் வழங்கவும் அப்போதனைகளின் சான்றாளர் களாகத் தாங்களே வாழ்ந்து காட்டவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. நன்னலம் நல்கும் இறைவா!
எம் நாட்டுத் தலைவர்கள் வாக்குறுதியின்படி வாழ்ந்து காட்டுபவர்களாகத் திகழவும், பொருந்தாத கூட்டணிகளால் தம் தனித்தன்மையை இழந்துபோகாமல் தங்கள் போதனைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழவும் எங்களுக்கு நலம்தரும் போதனைகளையே வழங்குவதில் கருத்தாயிருக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.
3. நிலைவாழ்வின் ஊற்றான இறைவா!
உயிர்த்தெழச் செய்ப வரும் வாழ்வு தருபவருமான உமது மகன் கிறிஸ்துவின் உயிர்த்தெழல்தான் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைப் பேருண்மை என்பதை திரு அவையின் பணியாளர்கள் அழுத்தம் திருத்தமாக விளக்கிக் கூறி நிலைவாழ்வின் ஊற்று நீர்தாம் என்பதை எல்லாரும் உணர்ந்து நம்பிக்கை கொண்டு வாழத் தகுந்த போதனையை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. நினைவாற்றலை வளர்க்கும் இறைவா!
அரசுப் பொதுத்தேர்வை, செய்முறைப் பயிற்சித் தேர்வுகளை அண்மையில் சந்திக்க இருக்கும் மாணவர்கள் தங்களை நல்ல நினைவாற்றலோடு சிறப்பாகத் தயாரிக்கவும் போராட்டக் களத்தில் இருக்கும் ஆசிரியர் களின் நியாயமான தேவைகள் நிறைவேற்றப்படவும், மாணவர்களின் நலன்கள் வீட்டிலும் வெளியிலும் காக்கப் படவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நல்ல குடும்பம் அமைக்கும் ஆர்வத்தை வழங்கும் இறைவா!
‘பெற்றோரே பிள்ளை களுக்கு முதற்பள்ளி’ என்றும், ‘குடும்பம் நற்பண்புகளின் நாற்றங்கால்’ என்றும் பெற்றோரையும் குடும்பத்தையும் உயர்வாக மதிக்கும் நாங்கள் பெறும் போதனைகளில் நல மானதை வாழ்ந்து காட்டவும் தரும் போதனைகள் உமது ஆட்சியின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.