திருநீற்றுப் புதனான, பிப்ரவரி 17 ஆம் தேதி, உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநீறை ஆசீர்வதித்து, திருப்பலி நிறைவேற்றினார். தவக்காலத்தின் தொடக்கமாக அமைந்துள்ள திருநீற்றுப் புதனன்று, திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில், கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலே விசுவாசிகள் பங்குபெற்றனர்.
திருத்தந்தை, திருநீற்றுப் புதன் திருப்பலியை, காலையில் நிறைவேற்றுவதை முன்னிட்டு, புதன்கிழமைகளில் வழக்கமாக இடம்பெறும் திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை, அன்றைய நாளில் இடம்பெறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.