ரெஜ்ஜியா அறையில் பாவமன்னிப்பு வழிபாடு
பிப்ரவரி 23 அன்று திரு அவையில்சிறியோரின் பாதுகாப்பு என்ற மூன்றுநாள்கள் அமர்வின் இறுதி நிகழ்வாக திருத்தந்தையின் தலைமையில் பாதிக்கப்பட்டவர் களின் முன்னிலையில் பாவமன்னிப்புசெப வழிபாடு நடைபெற்றது. இந்த வழி பாட்டில் கலந்து கொண்டவர்கள், ஆத்ம பரிசோதனை செய்து தங்களது குற்றங்களை அறிக்கையிட்டனர்.
திருஅவையில் ஆயர்கள், அருட் பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இரு பால் துறவியர் ஆகியோர் சிறாருக்கும், இளையோருக்கும் செய்த வன்முறை, குற்றங்களை மறைத்தது, பாதிக்கப்பட்ட பலரின் துன்பங்களை ஏற்காமல் இருந்தது, ஆயர்களாகிய நாங்கள் எங்களது பொறுப்பு களுக்கேற்ப வாழாமல் இருந்தது ஆகிய தவறுகளை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டினர். இவ்வழிபாட்டில் 200 பேர்கலந்து கொண்டு பாவங்களை அறிக்கை யிட்டது நெஞ்சத்தை உருக்குவதாயிருந்தது. ஆண்டவராம் இயேசுகிறிஸ்துவே, பாவிகளாகிய எங்கள்மேல் இரக்கமாயிரும் என அனைவரும் செபித்தனர். இவ்வழிபாட்டில் வாசிக்கப்பட்ட காணாமல்போன மகன் பற்றிய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் ஆப்பிரிக்காவின் கானா நாட்டு பேராயர் பிலிப் நாமெக் மறையுரை வழங்கினார்கள். திருஅவைத் தலைவர்கள் காணாமல்போய் திரும்பி வந்த மகனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழ பேராயர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து பாலியல் முறைகேட்டால் பாதிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியம்இடம் பெற்றது. இக்காயம் என்னை முழுமையாய் பாதித்தது. யாரும் என்னை புரிந்து
கொள்ளவில்லையே என்பது என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. ஆயினும்
இக்காயத்தோடு வாழ பழகினேன். இறுதியாக அனைத்து நடவடிக்கைகளும், இடங்களும் எப்போதும் சிறியோருக்குப் பாதுகாப்பாக அமைவதற்கு திருஅவைவிரும்புவதாக திருத்தந்தை தெரிவித் தார். ஒவ்வொரு முறை கேடும் ஒருதீச்செயல். மக்களின் நியாயப்படுத்தப் பட்ட கோபத்தில் திருஅவை, கடவுளின் கடுங்கோபத்தின் பிரதிபலிப்பைக் காண் கின்றது. இந்த மௌன அழுகையை, மிகக் கவனமுடன் கேட்பது நமது கடமை என்றார்.