திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் திருவழிபாட்டு விபரங்கள்
பிப்ரவரி 27 அன்று திருத்தந்தையின் திருவழி பாடுகளுக்கு பொறுப்பாளரான பேரருள்திரு. குய்தோ மரினி அவர்கள் திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் மாதங்களின் திருவழிபாடுகளைப்பற்றிய தகவலை வெளியிட்டார்.
மார்ச் 6 திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணிக்கு உரோம் புனித சபீனா பசிலிக்காவில் பாவ மன்னிப்புத் திருப்பவனியும், அதைத் தொடர்ந்து திருப்பலியும் நிறைவேற்றும் திருத்தந்தை, மார்ச் 10 ஆம் தேதி அரிச்ச்h ஊரில் திருப்பீட தலைமையக அதிகாரிகளுடன் ஆண்டு தியானத்தினை மேற்
கொள்கின்றார். மார்ச் 10 வெள்ளியன்று தியானத்தினை முடித்துவிட்டு உரோம் திரும்பும் திருத் தந்தை, மார்ச் 29 வெள்ளிக்கிழமை மாலை5 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் பாவ மன்னிப்பு வழிபாட்டை நடத்துவார். தொடர்ந்து மார்ச் 30, 31 தேதிகளில் ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார்.தொடர்ந்து பெரிய வார வழிபாடுகள் அனைத்தையும் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடத்துகின்றார்.
திருஅவையில் சிறியோர் பாதுகாப்பிற்கு சட்டங்கள்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் பிப்ரவரி 21 முதல் 24 முடிய வத்திக்கானில், திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தினைப் பற்றிய கருத்துக்கள் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. திருப்பீட செயலகத்தின் மூத்த அதிகாரிகள், திருப்பீடத்துறைகளின் தலைவர்கள், இயேசு சபை அருட்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி, காண்ஸ் ஜோல்னர், பேராயர்.சார்லஸ், கர்தினால் ஆஸ்வால்டு கிரேஷியஸ், கர்தினால் பிளேஸ் சூபிச் போன்றோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் திருஅவையில் சிறியோரைப் பாதுகாப்பது குறித்து திருத்தந்தை. பிரான்சிஸ் அவர்கள் தனதுசொந்த விருப்பத்தினால் வெளியிடும் அறிக்கையொன்று விரைவில் வெளியிடப்படும் என்றனர். சிறியோரைப் பாதுகாப்பது தொடர்பாக உலகெங்கும் இருக்கின்ற ஆயர்களின் நீதி மற்றும் மேய்ப்புப்பணிக் கடமைகளை விளக்கும் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய நூல் ஒன்று விரைவில் வெளியிடப்படும். ஆயர்பேரவைகள் இந்த விவகாரத்தை எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக திறமையான வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றனர்.