Namvazhvu
Vatican News நினிவே பகுதி மக்களுக்கு திருத்தந்தை நிதியுதவி
Thursday, 14 Mar 2019 11:44 am
Namvazhvu

Namvazhvu

நினிவே பகுதி மக்களுக்கு திருத்தந்தை நிதியுதவி

பிப்ரவரி 26 அன்று தனது டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை அவர்கள், உண்மையான சமய வாழ்வு என்பது ஒருவர் தனது முழு இதயத்தோடு கடவுளை அன்புகூர்வது, தன்னைப்போல் அயலவரை அன்பு கூர்வதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆண்டிலிருந்து இதுவரைக்கும் ஈராக் கிறிஸ்தவர்களின் நல்வாழ்விற்காக நான்குகோடி யூரோக்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.அண்மையில் தனக்கு வழங்கப்பட்ட       வாகனத்தை ஏலத்திற்கு விட்டதில் கிடைத்த இரண்டு லட்சம் யூரோக்களை, ஈராக் நாட்டின் நினிவே பகுதியிலுள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனைய மக்களுக்கென வழங்கியுள்ளார். .எஸ். இஸ்லாமிய அரசு நினிவே பகுதியில் தோல்வியுற்றதையடுத்து தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பிய மக்களின் நல்வாழ்விற்காகவும், அழிக்கப்பட்ட இரண்டு சீரோ - கத்தோலிக்க ஆலயங்களைச் சீரமைப்பதற்கும், மொசூல் நகரிலுள்ள பாலர் பள்ளி கட்டிடங்களை சீரமைப்பதற்கும், அழிக்கப்பட்ட கட்டிடங்களை சீரமைப்பதற்கும் இந்நிதியுதவி பயன்படுத்தப்படும் என்கின்றனர். 2016 ஆண்டு எர்பில் நகரிலுள்ள புனித யோசேப்பு பிறரன்பு மருத்துவமனைக்கு ஒரு இலட்சம் யூரோக்களை வழங்கினார் திருத்தந்தை.