Namvazhvu
செப்டம்பர் 21  -28 இந்த வாரப் புனிதர்கள்
Monday, 27 Sep 2021 10:21 am
Namvazhvu

Namvazhvu

 

செப்டம்பர் 21  

புனித மத்தேயு,                                                                                                                                                                                                                                                                                                                                                              Sr. மேரி ஆனந்த் DM 

             அல்பேயுவின் மகன். வசதியான தொழில் செய்தார். கலி­லேயக் கடற்கரைக்கு அருகில் வரிவசூலித்தார். யூதர்களின் இகழ்ச்சிக்கும், ஏளனத்திற்கும் ஆளானார். 31 ஆம் வயதில் இயேசு அவரைப் பார்த்து, என்னைப் பின்பற்றி வா என்று கூறியவுடன் அனைத்தையும் துறந்து இயேசுவைப் பின்சென்றார். இயேசுவின் இலக்கு தனது இலக்காக மாற்றினார். யூதேயா, எத்தியோப்பியா, பெர்சியா, மற்றும் எகிப்திலும் நற்செய்தி அறிவித்தார். எகிப்து அரசரின் மகன் இறந்தபோது இயேசுவின் பெயரால் இறந்தவருக்கு உயிரளித்தார். தொழுநோய் பாதித்த எகிப்து நாட்டு இளவரசி ஆபிஜினாவை நலமாக்கினார். மத்தேயு 70þ-80 ஆண்டுகளில் நற்செய்தி எழுதினர். இயேசு மெசியா என்றும், இறைமகன் என்றும், இறையாட்சியை நிறுவ வந்தவர் என்றும் எடுத்துரைத்தார். 90 ஆம் ஆண்டு மத்தேயு திருப்பலி நிறைவேற்றியபோது மத விரோதிகள் கற்களை எறிந்து கொலை செய்தனர்.

செப்டம்பர் 22

புனித தாமஸ் வில்லனோவா

புனித தாமஸ் வில்லனோவா ஸ்பெயின் நாட்டில் 1488 இல் பிறந்தார். ஏழ்மையாக வாழ்ந்து வருமானத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்கு கொடுத்தார். நல்ல நூல்களை வாசித்து ஆன்மீகத்தில் வளர்ந்தார். உயர்கல்வி கற்று பேராசிரியரானார். 1516, புனித அகுஸ்தீனார் துறவு மடத்தில் சேர்ந்தார். நற்செயல்கள் வழி அனைவரின் நன்மதிப்பை பெற்று 1518 இல் குருவானார். பேரரசர் 5 ஆம் சார்லஸ் அரசவையில் ஆலோசகராகவும், நிர்வாக குழுவின் உறுப்பினரானார். 1545 இல் வலென்சியா மறைமாவட்ட பேராயரானார். ஏழைகளுக்கு கல்லூரி நிறுவி கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைத்தார். மருத்துவமனைகள் நிறுவி நோயாளிகளை குணமாக்கினார். தொழிலாளர்கள் திருப்ப­லியில் பங்கேற்று வேலைக்கு செல்ல அதிகாலையில் திருப்பலி­ வைத்தார். நாளும் ஐநூறுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு உணவளித்தார். மரியாவின் அருகில் அமர்ந்து செபித்து 1555 ஆம் ஆண்டு இறந்தார்.

செப்டம்பர்  23

புனித பியோ

புனித பியோ இத்தா­லியில் 1887, மே 25 ஆம் நாள் பிறந்தார். “செபமே இறைவனின் இதயத்தைத் திறக்கும் திறவுகோல்” என்றுகூறி ஆர்வமுடன் செபித்தார். விவிலி­யம், புனிதர்களின் சுயசரிதை வாசித்து தவ ஒறுத்தல்கள் செய்தார் பியோ. இதயத்தில் இறைவனுக்கு முதலி­டம் கொடுத்தார். இறையன்பை தியானித்து இறைபிரசன்னம் பெற்றார். நற்கருணைப் பேழை, அன்னை மரியாவின் முன் செபிப்பதில் மகிழ்ந்தார். கப்புச்சின் சபையில் துறவு மேற்கொண்டு 1910 இல் குருவானார். நாளும் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வார்த்தைப்பாட்டைப் புதுப்பித்தார். இயேசு, தனது ஐந்து காயங்களையும் பியோவின்

உடலி­ல் பதித்தார். “அன்னை மரியாவை அன்பு செய்யுங்கள். அன்றாடம் செபமாலை செபியுங்கள். உலகத்தின் தீமைகளை வெல்ல அதுதான் சிறந்த ஆயுதம்” என்றார். உலக அமைதிக்காக செபித்து, செபிக்கும் ஏழை துறவியாக வாழ்ந்த பியோ 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் இறந்தார்.

செப்டம்பர் 24

புனித ஜெரார்டு சாக்ரெதோ

புனித ஜெரார்டு சாக்ரெதோ வெனிஸில் 980 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் வழி இறையன்பை சுவைத்தார். அயலானில் கிறிஸ்துவின் முகம் கண்டார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து, ஆசீர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்தார். கல்வி பணியுடன் நற்செய்தியை அறிவித்து ஆயரானார். இறைமக்களின் நலன் முன்னிட்டு இறைபணி செய்தார். மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். கிறிஸ்துவின் விழுமியங்களைப் போதித்தபோது, தீய வாழ்வில் உட்பட்டவர்கள் மனந்திரும்பி நேர்வழி சென்றனர். ஏழைகளைச் சுரண்டியவர்களை கண்டித்தார். அரசர் இறந்தவுடன் கிறிஸ்துவை ஏற்காதவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தபோது, அவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தார். திருப்பலி­யை பக்தியுடன் நிறைவேற்றி, இறையருளின் செல்வரானார். 1046 இல் எதிரிகள் கைது செய்து, மலைக்கு இழுத்து சென்று அடித்து கொலை செய்தனர்.

செப்டம்பர்  25

புனித சியோல் ஃபிரித்

புனித சியோல் ஃபிரித் 642 ஆம் ஆண்டு பிறந்தார். பக்தியும் நம்பிக்கையும் மிகுந்து வளர்ந்தார். புனித ஆசீர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்து துறவு மேற்கொண்டார். நவத்துறவிகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வழிகாட்டினார். 27 ஆம் வயதில் ஆயரானார். தூய ஆவியின் அருள்வரங்களால் விசுவாச வாழ்வில் முன்னேறினார். தாழ்ச்சியும், புரிதலும், விட்டுக்கொடுக்கும் குணம் பெற்று அனைவரோடும் நட்புடன் பழகினார். நார்த்தம்பிரியாவில் பிளேக் நோய் பரவியபோது மக்களுக்கு மருத்துவம் செய்தார். இறைவார்த்தையை பறைசாற்றி மக்களின் அச்சங்களை அகற்றினார். நம்பிக்கை இல்லா மக்களுக்கு நம்பிக்கையை அமுதாய் ஈட்டினார். இறையாற்றலால் வழிநடத்தப்பட்டு இறைபணி செய்தார். புனித ஜெரோம் மொழிபெயர்த்த வுல்கத்தா எனப்படும் மறைநூல் பிரதியை திருத்தந்தை முதலாம் கிரகோரிக்கு கொடுத்தார். உரோம் செல்லுகையில் 716 இல் செப்டம்பர் 25 ஆம் நாள் இறந்தார்.

செப்டம்பர்  26

புனிதர்கள் கோஸ்மாஸ் & தமியான்

புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் சி­சிலியாவில் இரட்டையர்களாகப் பிறந்தனர். இருவரும் மருத்துவராக ஒயாஸ் பகுதியில் மருத்துவப்பணி செய்தனர். இறைவனுக்கு தங்களை அர்ப்பணித்து, குணமாக்கும் பணி செய்தனர். வீடுகளில், வழியோரங்களில் வாழ்ந்த நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து குணப்படுத்தினர். பணம் வாங்காமல் சேவை உள்ளத்துடன் மருத்துவம் செய்து அனைவரின் நன்மதிப்பை பெற்றார்கள். மருத்துவம் வழி கிறிஸ்துவை பகிர்ந்துகொடுத்து பலருக்கு திருமுழுக்கு கொடுத்தனர். ஆலய பணிகளுக்கு உதவி செய்தனர். இத்தருணம் டயோக்கிளியஸ் பேரரசன் கிறிஸ்தவர்களை கொலை செய்ய ஆணையிட்டான். கோஸ்மாஸ், தமியான் இருவரையும் கைது செய்து கிறிஸ்துவை மறுதலி­க்க தண்ணீரில் அமிழ்த்தியும், நெருப்பி­ட்டும், சிலுவையில் அறைந்தும் துன்புறுத்தியபோது, “கிறிஸ்துவே எங்கள் மீட்பர்” என்றனர். ஆத்திரம் அடைந்த ஆளுநன் மரண தண்டனை தீர்ப்பளித்து 303, செப்டம்பர் 26 ஆம் நாள் தலையை வெட்டி கொலை செய்தனர்.