தஞ்சாவூர் மறைமாவட்ட அன்பியப் பணிக்குழு நடத்தும்
அன்பிய மாநாடு-வேளாங்கண்ணி - மார்ச் 16, 17, 2019
16.03.2019 காலை 6.00: மணி அன்பியத் திருப்பலி (ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி)
தலைமை: உதகை ஆயர் மேதகு. . அமல்ராஜ்
அன்பிய மாநாடு மலர் வெளியீடு: தஞ்சை ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ்.
காலை 9.00 மணி -அன்பிய பகிர்வு மலர் தொகுப்பு வெளியீடு - மேதகு உதகை ஆயர்.
இருநாள்களிலும்: பொதுநிலையினரும் அன்பியமும் (பேரருட்திரு .ஞானப்பிரகாசம் தஞ்சை மறைமாவட்ட முதன்மைக்குரு),
அன்பிய வாழ்வே பகிர்தல் வாழ்வு (அருட்திரு. .பன்னீர்செல்வம்),
அன்பிய வாழ்வே ஒற்றுமையின் அடித்தளம் (அருட்திரு. .செபஸ்டின்),
அன்பிய வாழ்வே கிறிஸ்தவ வாழ்வு (அருட்பணி..ஜோசப் ஜஸ்டஸ்செயலர், தமிழக அன்பியப் பணிக்குழு),
அன்பியக் கூட்டங்களின் ஆன்மிகம் (அருட்பணி. .ஜோசப் மரிய வியான்னி)
ஆகிய தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்படுகிறது.
முதல்நாள் மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனை - அருட்பணி. ஆரோக்கியசாமியால் நடத்தப்பட்டு இறுதி ஆசீரை உதகை ஆயர் வழங்குகிறார்.
தொடர்ந்து பேராலயத் திருத்தல அதிபர் பேரருட் திரு. .பிரபாகர் தலைமையில் திருப்பலி அதில் பேராலயப் பங்குத் தந்தை அருட்பணி. . சூசைமாணிக்கம் மறையுரையாற்றுகிறார்.
மறுநாள்: அருட்பணி..நெப்போலியன் ஆல்பர்ட் குழுஆய்வை முன்னின்று நடத்துகிறார்.
மாநாடு 17.03.2019 ஞாயிறு காலை 11.00 மணிக்கு தஞ்சை ஆயர் மேதகு. . தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் நிறைவு பெறுகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பணியாளர்களின் துணையோடு அருட்பணி. மரிய மிக்கேல் சிறப்பாகச் செய்து வருகிறார். மாநாடு வெற்றிபெற நம் வாழ்வு வாழ்த்துகிறது!
இந்நாள்களில் நீங்கள் நம் வாழ்வுக்கு சந்தா செலுத்தலாம்! புதுப்பிக்கலாம்! வெளியீடுகளை வாங்கி மகிழலாம்!