Namvazhvu
குடந்தை ஞானி நேர்காணல்: 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் தனிச்சிறப்பு
Saturday, 30 Oct 2021 04:48 am
Namvazhvu

Namvazhvu

உலக ஆயர்கள் மாமன்றம் மூன்று வகைப்படும். 1. சாதாரண மாமன்றம். 2. அசாதாரண மாமன்றம். 3. சிறப்பு மாமன்றம். 2023ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றம், சாதாரண மாமன்றம் ஆகும்.

2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கின்ற 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும், இம்மாதம் 17ம் தேதியிலிருந்து முதல்நிலை தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, அருள்பணி முனைவர் இயேசு கருணாநிதி அவர்கள், 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள தலைப்பு பற்றியும், இம்மாமன்றத்தின் தனிச்சிறப்பு பற்றியும் விளக்குகிறார். இவர், CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுவின் செயலரும் ஆவார்.