“இயேசுவின் பாஸ்கா பேருண்மையிலிருந்து பொழியப்படும் தூய ஆவியாரே, ஆன்மீக வாழ்வின் ஆரம்பம் என்றும், நம்பணிகளை அல்ல, மாறாக, நம்மில் தூய ஆவியார் செயல்படுவதற்கேற்ப நம் இதயங்களை அவர் மாற்றுகிறார்!” என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதனன்று கூறியுள்ளார்.
புனித பவுலடிகளார் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் கூறியுள்ள தூய ஆவியாரின் கனிகளைப் பற்றி (கலா.5,22-24)அக்டோபர்27புதன்மறைக்கல்வியுரையில்எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மறைக் கல்வியுரையின் அடிப்படையில், பொது மறைக் கல்வியுரை (#General Audience) என்ற ஹாஷ்டாக்குடன் புதனன்று தன்டு விட்டர் செய்தியையும் வெளியிட்டுள்ளார்.
நவம்பர்21ல் உலக இளையோர் நாள் திருப்பலி
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற வாரத்தில் துவங்கும் நவம்பர் மாதம்21ம் தேதி, பொதுக்காலம் 34ம்ஞாயிறு சிறப்பிக்கப்படும் கிறிஸ்து அரசர் பெரு விழாவன்று, உரோம் உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, புனித பேதுருபெருங் கோவிலில் 36வது இளையோர் உலக நாள் திருப்பலியை நிறை வேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிவித்துள்ள, திருத்தந்தையின் திரு வழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான, பேரருள் திரு தியெகோஜொவான்னிரவெல்லி (Diego Giovanni Ravelli) அவர்கள், வருகிற நவம்பர்4,5, 14ஆகிய நாள்களில் திருத்தந்தை நிறை வேற்றும் ஏனையத் திருப்பலிகள் குறித்த விவரங்களை, இம்மாதம் 22ம்தேதியன்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர்4ம் தேதி பகல்11 மணிக்கு, புனித பேதுரு பெருங் கோவிலில், கடந்த ஆண்டில் இறை பதம் சேர்ந்த கர்தினால்கள் மற்றும், ஆயர்களின் ஆன்மா நிறையமைதியடைய திருப்பலி, நவம்பர் 5ம்தேதி காலை10.30 மணிக்கு, உரோம் இயேசுவின் திரு இதய கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில்திருப்பலி, மற்றும், நவம்பர் 14ம்தேதி ஆண்டின் 33ம் ஞாயிறன்று புனித பேதுரு பெருங் கோவிலில், வறியோர் உலக நாள் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறை வேற்றுவார்.
இன்னும், வறியோருக்கென்று, இதய நோய் சிகிச்சை வழங்கும் நகரும் மருத்துவமனை ஒன்றை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், திருத்தந்தையின் பிறரன்பு அமைப்பு அலுவலகமும், இத்தாலிய இதயநோய் அறக்கட்டளையும், உரோம் San Carlodi Nancy மருத்துவமனை குழுமமும் இணைந்து நடத்தியுள்ளன.
அக்டோபர்25 திங்கள்காலை9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்ட இம்மருத்துவமனை, "இதயத்தின்சாலைகள், முன்தடுப்புக்கு ஒரு பயணம்" என்ற தலைப்புடன், இப்புதிய முயற்சியை மேற்கொண்டது. இம்முயற்சி, இதயம் சார்ந்த பிரச்சனைகளைப் பரிசோதிக்க இயலாமல் இருக்கும் ஏழைகளுக்கு வாழ்வு வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.
இத்தாலியில் இடம் பெறும் இறப்புக்களில் 35.8 விழுக்காடு, இதய நோய் தொடர்புடையதாகும். இது பெண்களில் 38.8 விழுக்காடும், ஆண்களில் 32.5 விழுக்காடும் இடம் பெறுகின்றன. சாலைகளில் வாழ்வோர், இதய நோயால், அதிகம் இறக்கின்றனர்.