Namvazhvu
திருத்தந்தைபிரான்சிஸ் இறை வேண்டல் செய்யும் போது நாம் தனியாக இல்லை
Wednesday, 03 Nov 2021 07:34 am
Namvazhvu

Namvazhvu

இறை வேண்டல் செய்யும் போது நாம் தனியாக அல்ல, மாறாக, புனிதர்கள் குழுமத்தோடு ஒன்றித்து வேண்டுகிறோம் என்ற கருத்தை மையமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர்30 சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

நவம்பர்01 அன்று சிறப்பிக்கப்படும் புனிதர் அனைவரின் பெரு விழாவை முன்னிட்டு சனிக்கிழமையன்று இறை வேண்டல், புனிதர்களின் ஒன்றிப்பு(#Prayer #CommunionOfSaints) என்ற ஹாஷ்டாக்குகளுடன் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, இறை வேண்டல் செய்யும் போது, ஒரு போதும் நாம் தனியாகச் செய்வதில்லை என்று கூறியுள்ளார்.

இவ்வாறு நாம் இறை வேண்டல் செய்வது பற்றி சிந்திக்காமல் இருந்தாலும் கூட, அந்நேரத்தில், நமக்கு முன்னேயும், நமக்குப் பின்னேயும் எழுகின்ற, மன்றாட்டுக்களின் மிகப் பெரும் ஆற்றில் மூழ்கியிருக்கிறோம் என்றும் திருத்தந்தை,  அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

திருத்தந்தையின் சந்திப்புக்கள்

ஆயர்கள் பேராயத்தலைவர் கர்தினால் Marc Ouellet, கோஸ்டாரிக்கா திருப்பீடத் தூதர் பேராயர் Bruno Musar உலக சுற்றுலாத் துறையின் (UNWTO) திருப்பீடப் பிரதிநிதி அருள்பணி Maurizio Bravi, பேராயர் Giuseppe Pinto, திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவர் பேராயர் Vincenzo Paglia, காமரூன் மற்றும் ஈக்குவிட்டோரியல் கினி திருப்பீடத்தூதர் பேராயர் Julio Murat, கிறிஸ்தவ வாழ்வின் தோழமை சபையின் தலைவர் அருள்பணி Jose David Correa Gonzalez ஆகியோரையும் அக்டோபர்30, இச்சனிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்துப் பேசினார்,.