Namvazhvu
Fr. Gnani Raj மாமன்றத் தயாரிப்பின் முதல் நிலை கால அளவுநீட்டிப்பு
Wednesday, 03 Nov 2021 07:40 am
Namvazhvu

Namvazhvu

வத்திக்கானில், 2023ம் ஆண்டு அக்டோபரில் நடை பெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, இம்மாதம் 17ம்தேதி, உலக அளவில் துவக்கப்பட்டுள்ள ஈராண்டு தயாரிப்புக்களின் முதல் நிலையின் காலக்கெடுவை, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்15ம் தேதி வரை நீட்டித்துள்ளது,  ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலகம்.

இந்நடவடிக்கை குறித்து அக்டோபர்29 வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட மாமன்றத்தின் பொதுச் செயலகம், தற்போது துவக்கப்பட்டுள்ள மாமன்றத்தின் முதல் நிலை செய் முறையில், செவி மடுத்தல் மற்றும், உரையாடலின் ஓர் உண்மையான அனுபவத்தை,  இறை மக்கள் அனைவரும் பெறுவதற்கு உதவியாக,  இந்த காலக் கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது

காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று, பல்வேறு பகுதிகளிலிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதையடுத்து, உலகின் அனைத்து ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டு முறை திரு அவைகள், மற்றும், ஏனைய திரு அவைக் குழுமங்கள் ஆகியவை, முதல் நிலை செய் முறையின் தொகுப்புக்களைச் சமர்ப்பிப்பதற் குரிய காலக் கெடுவை, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம்தேதி வரை அப்பொதுச் செயலகம் நீட்டித்துள்ளது,.

இதற்கு முன்னதாக, முதல் நிலை தயாரிப்புத் தொகுப்புக்கள் சமர்ப்பிக்க வேண்டிய காலக் கெடுவை 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்றும் அப்பொதுச் செயலகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக் குழுக்கள்

மேலும், 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் நிலை செய் முறைகளில்,  கிறிஸ்தவ ஒன்றிப்பு அம்சங்களையும் உறுதி செய்வதற்கு உதவியாக, சில நடை முறை வழிகாட்டிகள் கொண்ட மடல் ஒன்று, உலகின் ஆயர் பேரவைகளின் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக் குழுக்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோகிரெக் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கர்ட்கோக் அவர்களும் இணைந்து இம்மடலை அனுப்பியுள்ளனர்.