“புனித யோசேப்பே, கன்னி மரியின் கணவரே, திருஅவை முழுவதையும் எப்பொழுதும் கண்காணித்து, ஒவ்வொரு தருணத்திலும் அதைப் பாதுகாத்தருளும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பாதுகாவலராகிய புனித சூசையப்பர் திருவிழாவாகிய மார்ச் 19 ஆம் தேதி தன் டுவிட்டர் பக்கத்தில் சுட்டுரை வெளியிட்டுள்ளார்.
புனித யோசேப் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பின் விழாவன்று, கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப்பணியைத் துவக்கினார் என்பதும் அர்ஜென்டினாவில் பணியாற்றிய காலத்திலும், தற்போது வத்திக்கானில் தனது அலுவலக அறையிலும், உறங்கும் நிலையிலுள்ள புனித யோசேப் அவர்களின் திருவுருவத்தை வைத்துள்ளார் என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது. இந்த மார்ச் 19 ஆம் தேதியுடன் திருத்தந்தை தம் தலைமைப் பணியைத் துவங்கி ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நம் திருத்தந்தைக்காக நாமும் செபிப்போம்.