Namvazhvu
ஒற்றுமை கூட்டுசெயல்பாடு வேண்டும் திருஅவையில் ஒன்றிப்பு, பங்கேற்பு, நற்செய்திப்பணி
Saturday, 20 Nov 2021 08:40 am
Namvazhvu

Namvazhvu

2021 அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் வரை மூன்று கட்டங்களாக (1. தலத்திருஅவை அடிப்படையில், 2. கண்டங்கள் அடிப்படையில், இறுதியாக 3. உரோமையில் நடைபெறவிருக்கும்) அகில உலக ஆயர் மாமன்றம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் திருஅவையில் கூட்டு ஒற்றுமை (Synodality in the Church) குறித்து சிந்திக்கிறது. ஒன்றிப்பு (Communion), பங்கேற்பு (Participation)), பணி (Mission) இவை அனைத்திலும் திருஅவை முழுவதும் இணைந்து பயணிக்க அழைப்பு நல்குகிறது. அகில உலக ஆயர் மாமன்றம் திருத்தந்தையின் தலைமையில் ஒன்று கூடி வரும் இக்காலத்தில், ஒருவர் மற்றவருக்கு செவிமடுப்பதும் (of Mutual Listening) இணைந்து நலமான, உறுதியான முடிவுகளை மேற்கொள்வதும் திருஅவையின் தொடர் வாழ்வுக்கும் பணிக்கும் அவசியமாகிறது.

Synod of the Bishops - அகில உலக ஆயர் மாமன்றம் தலத்திருஅவையாக பல்வேறு நாடுகளில் நாம் வாழ்ந்தாலும் பணியாற்றினாலும், நாம் அனைவரும் ஒரே திருஅவையின் இறைமக்கள் என்பதையும் அனைவரும் இணைந்ததே திருஅவை என்பதையும் ‘‘Synod of the Bishops அகில உலக ஆயர் மாமன்றம் நமக்கு உறுதிப்படுத்துகிறது. அகில உலக ஆயர் மாமன்றமே ஆங்கிலத்தில்Synod என்றுதான் அழைக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் மாமன்றச்செயல்பாடுஇணைந்த திருஅவையே இணைந்து பயணிக்கும் திருஅவை என்பதை இன்று தன்நோக்கமாகக் கொண்டிருக்கிறது. தொடக்கக்காலத் திரு அவையில் நிலவிய இணைந்த வாழ்வும், இணைந்த பணியும், இணைந்த பயணமும் (திப 2:42-47, 4:32-36) அதிகார மையத் திருஅவையால், ஆட்சி மையத் திருஅவையால், பண மையத் திருஅவையால், செல்வாக்கு மையத் திருஅவையால் சீர்குலைந்து போனது. திருஅவையின் பணியாளர்கள் ஆட்சியாளர்களாக மாறிப்போனதால், பணம், அதிகாரம், நிலம், சொத்து, ஆட்சி இவற்றில் தங்கள் கவனத்தை செலுத்தியதால் திருஅவை தன் உண்மை இயல்பான இணைந்த வாழ்வும் இணைந்த பணியும் என்ற எதார்த்தத்தை இழந்து நின்றது.

எனவேதான், திருஅவையின் உண்மை இயல்புக்குத் திரும்பிச் செல்லவும் இயேசுவின் இதயத்தோடும் இறையாட்சி இலக்கோடும் இணைந்து பணியாற்ற பல்வேறு காலகட்டங்களில் திருஅவையில் சங்கங்கள் கூடின. எருசலேம் திருச்சங்கம் (திப 15) தொடங்கி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் (1967-72) வரை திருஅவையைப் புதுப்பிக்கும், புனரமைக்கும், புத்துயிரூட்டும் திருஅவை சங்கங்கள் நிகழ்ந்தேறியுள்ளன. மறுபக்கத்தில் அகில உலக ஆயர் மாமன்றம் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பல்வேறு இலக்குகளோடு நோக்கங்களோடு கூடி வருகிறது. அதனடிப்படையில் இப்போது நடைபெறும் அகில உலக ஆயர் மாமன்றம் (ளுலnடின டிக வாந hரசஉh) இன்று திருஅவையில் அனைத்து நம்பிக்கையாளர்களின் ஆதிக்க மனநிலையையும் அடிமை மனநிலையையும் விடுத்துநாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவில் ஒன்றேஎன்ற மனநிலையோடு பயணிக்க நமக்கு அறைகூவல் விடுக்கிறது. இதன் பார்வையிலேயே முதல் கட்டம், தலத்திருஅவையில் தொடங்குகிறது.

நம்பிக்கையாளர் கடமை (Sensus Fidei)

இணைந்து நடப்போம், இணைந்து பயணிப்போம், இணைந்து வாழ்வோம் என்று சொல்லும்போது  இது முன்னேறிச் செல்லும் பயணமாகவே பார்க்கப்படவேண்டும். பின்னோக்கி நம்மைக் கொண்டு செல்லும் மனநிலையாக அல்ல; புதிய இதயமாக இயேசுவின் இதயம் கொண்டு அருள் நிலையினரும், துறவு நிலையினரும், பொதுநிலையினரும் ஒருவர் மற்றவரை மதித்து, ஒருவர் பிறரை தம் வாழ்வாலும் பணியாலும் நிறைவு செய்வதே இந்த ஆயர் மாமன்றத்தின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும். அப்படியெனில் கூட்டொற்றுமையும், கூட்டுசெயல்பாடும் இங்கே அவசியம். திருஅவை அடிப்படையில் இயேசுவின் இதயம் கொண்டு வாழ்வதும், அவரின் பாதையில் வழிநடப்பதும், வழிநடத்துவதும் அனைத்து நம்பிக்கையாளர்களுக்குமே கடமையாக (Sensus Fidei) மாறுகிறது.

Synod of the Bishops அகில உலக ஆயர் மாமன்றம் என திருஅவையின் வழக்கத்தில் அழைக்கப்பட்டாலும், இது விளிம்பு நிலையில் உள்ளோரின் குரலையும் கேட்க விரும்புகிறது. நற்செய்தி அறிவிப்பு அடிப்படையில் திறந்த உள்ளத்தோடு ஒருவர் மற்றவருக்கு செவிமடுப்பதில் தொடங்குகிறது. ‘இறைமக்கள் திருக்கூட்டம் என்பது பல்வேறு நிலைகளில் அனைத்து நிலையினரின் குரலாகவும் ஒலிக்க வேண்டும் என்று சொல்லும்போது கடைக்கோடியில் இருப்போரின் குரலுக்கும், விளிம்பு நிலையில் இருப்போரின் குரலுக்கும், இதுவரையில் திருஅவையில் கண்டுகொள்ளப்படாதோரின் குரலுக்கும் செவிமடுத்தலில்தான் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறது. திருஅவையில் அதிகார நிலையில் இருப்போர் மட்டும் பேசுவதும், மற்ற அனைவரும் அமைதியாக கேட்பதும் ளுலnடின ஆகாது. அதற்கு இணையான செவிமடுத்தலும் கருத்து பரிமாற்றமும், ஒன்றுகூடி முடிவுகளை மேற்கொள்வதும் இங்கே திருஅவையில் அடிப்படை செயல்பாடாக மாறுகிறது.

Synod  – ‘இணைந்து பயணிக்க (The Call to Journey Together)

திருஅவையில் ளுலnடின எனப்படும் ஆயர் மாமன்றம், இன்றைய காலச் சூழலில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பற்றி 2015ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆயர் மாமன்றத்தின் பொன் விழா ஆண்டின் போது (1965-2015) திருத்தந்தை பிரான்சிஸ் ஆற்றிய உரையிலும், 2018 ஆம் ஆண்டு அகில உலக வல்லுநர்களின் குழுவானது வெளியிட்ட மாமன்ற நடைமுறைகளும் விவரிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் நோக்குகின்றபோது இப்பொழுது தொடங்கியுள்ள மறைமாவட்ட அளவிலான அகில உலக ஆயர் மாமன்றத்தின் முதல் கூட்டம் நம்மை இணைந்து பயணிக்க (The Call to Journey Together) அழைக்கின்றது. காலத்தின் அடையாளங்களை (இஉதி. 4) நன்கு அறிந்து நற்செய்தியின் ஒளியில் அவற்றை புரிந்து கொள்ளவும் பொருள்கொள்ளவும் மிகக் குறிப்பாக இன்று கொரோனா (Covid-19) பின்புலத்தில் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப செயல்பட நாம் அழைக்கப்படுகிறோம்.

ஏற்கனவே, நம் திருத்தந்தை வெளியிட்டநாம் அனைவரும் சகோதரர்களே (Fratelli Tutti) என்ற ஏடும், “இறைவா உமக்கே புகழ் (audato Si) என்ற ஏடும் இன்றைய காலச் சூழ்நிலையையும், திருஅவையின் ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பையும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. சமமின்மையும், சகோதரத்துவமின்மையும் இன்று அதிகரிக்கும் ஆபத்தான சூழலால் அகில உலக ஆயர் மாமன்றம் நம் அனைவரையும் இணைந்து பயணிக்க அழைப்பு நல்குகிறது. ஏழைகளின் குரலுக்குச் செவிமடுக்கவும், அழுகையை கேட்கவும், இன்றும் ஆவியானவரின் ஏவலுக்கு செவிமடுக்கவும் அழைப்புவிடுக்கப்படுகிறது. ஆவியானவரின் புதுப்பித்தலுக்கு நம்மை அர்ப்பணிக்கஆயர் மாமன்றம் நமக்கு அழைப்பு நல்குகிறது.

இணைந்து பயணிப்பதில் இறைவாக்குத் தன்மை (Synod’s Prophetic Nature)

இணைந்து பயணிப்பதில் திருஅவையில்இறைவாக்குத் தன்மை உள்ளது என்பதை நாம் மறந்துவிட இயலாது. இணைந்து பயணிப்பதில் தேங்கிய மனிதர்களாக அல்ல; இறைவாக்கினரின் மனநிலையோடு திருஅவையில் அடிப்படை மாற்றங்களை நிகழ்த்த முன் வருகின்றோம். இதன் மூலம் அனைவரின் பொது நலன்களையும் முன்னிறுத்தும் இயக்கமாக திருஅவை உருவெடுக்கிறது. ஒன்றித்த மனநிலையும் (Synodal Mentality) ஒன்றிப்பு, சகோதரத்துவம், பங்கேற்பு, கூட்டுப் பொறுப்பு, பணி பகிர்வு இவை நிறைந்து காணப்படும் திருஅவையாக நாம் உருவெடுக்க தொடர் மனமாற்றமும், இதய செயல்பாடும் அவசியம். இதன் மூலமே நாம் திருஅவையின் இணைந்து பயணிப்பதை உண்மையாக்க முடியும். ஒன்றிணைந்த

திரு அவையாக (A Constitutively Synodal Church) ) இறைவார்த்தைக்குச் செவி மடுக்கும் (Listening to Scriptures) இயக்கமாக அதனடிப்படையில் திருஅவையில் உள மாற்றத்தையும் இதய சீரமைப்பையும் நாம் நிகழ்த்த வேண்டும்.

இணைந்து பயணிப்பதில் அடிப்படையான 10 கருப்பொருட்கள்

ஒன்றித்த திருஅவையாக பயணிக்கும் நாம் இணைந்தே நற்செய்தியை அறிவிக்கிறோம். இணைந்தே நாம் பயணிக்கின்றோம் என்பதுவே இங்கு அடிப்படையாகிறது. அப்படியெனில் நமது தலத் திருஅவைகளில் நம்மால் இணைந்து பயணிக்க முடிகிறதா? எப்படி என்ன நிலையில் நாம் இணைந்து பயணிக்கின்றோம்? இணைந்து பயணிப்பதால் நம்மில் ஏற்பட்டுள்ள அனுபவங்கள் என்ன? அப்படி இணைந்து பயணித்தல் நம்மில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதா? இணைந்து பயணிப்பதில் உள்ள தடைகள், பிரச்சனைகள் சவால்கள் என்ன? என்ன காயங்களை அதிலே அடைந்துள்ளோம்? நம்மில் எழுந்த ஒலி நிலைகள் என்ன? இணைந்து பயணிப்பது ஒட்டுமொத்தமாக நமக்கு கற்றுத் தந்துள்ள பாடங்கள் யாவை? இன்னும் நம்மில் நிகழ வேண்டிய மாற்றங்கள் என்ன? இன்னும் தடைகளை தாண்டி நாம் கூடி வாழவும், இணைந்து பயணிக்க என்ன செய்ய வேண்டும்? என்பதையும், நம் திருஅவைக்கு ஒன்றாய் பயணிக்க திறந்துவிடப்பட்டுள்ள பாதைகள் யாவை? என்பதையும் நாம் காணவும், அந்தப் பாதைகளில் பயணிக்கும் இந்த அகில உலக ஆயர் மாமன்றத்தின் ஒன்றாய் பயணித்தல் என்ற மையப்பொருள் நமக்கு அழைப்பு நல்கிறது. இப்படி நமது தலத்திருஅவைகளில் இணைந்து ஒன்றாய் பயணிக்க இந்த மாமன்ற தயாரிப்பு ஏட்டின் (Preparatory Document) for the 16th Ordinary General Assembly of the Synod of Bishops “For A Synodal Church: Communion, Participation and Mission” released on 7th September 2021), 5ஆம் பகுதி அடிப்படையான 10 கருப்பொருட்களை பின்வருமாறு வழங்குகிறது.

1. முதலாவதாக திருஅவையும் மானிட சமூகமும் இணைந்து பயணிக்க வேண்டிய சூழலில் யாரோடு நாம் இன்று இணைந்து ஒன்றாய் பயணிக்க வேண்டும் (The Journeying Companions) என்ற அடிப்படையான முதல் கேள்வி எழுகிறது. இங்கே நாம் இணைந்து பயணிக்க கடமைப்பட்டுள்ள ஏழை எளியோரை விளிம்பு நிலையில் உள்ளோரை மறந்துவிட இயலாது.

2. இரண்டாவதாக செவிமடுத்தல் (Listening) திறந்த மனதுக்கும், திறந்த இதயத்துக்கும் அடிப்படை. ஒருவர் மற்றவருக்கு செவிமடுத்தலில் எந்த எதிர்பார்ப்பு எண்ணமும் இன்றி செவிமடுத்தல் அவசியம். இங்கே இதுவரை யாருக்கு செவிமடுக்கவில்லையோ அந்த ஏழைகளுக்கும், எளியோருக்கும், பாமரருக்கும் செவிமடுப்பது நமது கடமையாகிறது.

3. மூன்றாவதாக துணிவுடன் பேசுதல் (Speaking out). சுதந்திரம்  உண்மை, பிறரன்பு இவை அனைத்துக்கும் நாம் உண்மையுடனும், உறுதியுடனும் குரல் கொடுக்க வேண்டும். உண்மைக்கு சார்பாகவும், அநீதிக்கு எதிராகவும் நாம் குரல் கொடுப்பது இங்கே அவசியமாகிறது.

4. நான்காவதாக நாம் ஒன்றிணைந்து அருள் அடையாளங்களையும் நற்கருணையும் கொண்டாடுதல் (Celebrating) என்பது அருள்பணியாளர்கள் மட்டுமல்ல; பொதுநிலையினர் இணைந்து பங்கெடுப்பது சிறப்பிப்பது அவசியமாகிறது. வாசகர் நிலை, பீடத்துணைவர் நிலை போன்றவற்றில் பொதுநிலையினரையும் உள்ளடக்குவதால் இணைந்து பங்கெடுப்பது சிறப்பிப்பது ஏற்படுகிறது.

5. ஐந்தாவதாக நாம் ஆற்றும் பணிகளில் கூட்டுப் பொறுப்பு (Co - Responsible) என்பது அவசியமாகிறது. நாம் அனைவரும் பயணிக்கும் சீடர்கள் என்பதால் நமக்குள் கூட்டுப்பொறுப்பு எழுகிறது. அடக்கி ஆளாமல் தன்னிச்சையாக பணி செய்யாமல் கூட்டுப் பொறுப்புடன் இணைந்து பணியாற்றுவது இங்கு தவிர்க்க இயலாதது.

6. ஆறாவதாக திருஅவைக்கும் சமூகத்திற்கும் திறந்த மனதோடு நாம் மேற்கொள்ளவேண்டிய உரையாடல் அவசியமாகிறது. நாம் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகள், முரண்பாடுகள், தடைகள் அனைத்தையும் நமது தலஅவையிலும், அருகாமையில் உள்ள தலத் திருஅவைகளோடும், மக்கள் அமைப்புகளோடும், திருஅவை இயக்கங்களோடும், இணைந்து உரை யாடுவது நமக்கு நல்ல பாடங்களை கற்றுக் கொடுக்கும்.

7. ஏழாவதாக நமது பிற கிறிஸ்தவ அவைகளோடு நாம் உறவு கொண்டு வாழவும், திறந்த இதயத்துடன் ஒற்றுமைக்கான பாதையில் பயணிக்கவும், முழுமையாக நாம் செயல்படவும் நம்மை அழைக்கிறது.

8. எட்டாவதாக அதிகாரம் என்பதை பங்கேற்பு என்னும் நிலையிலும், பங்களிப்பு என்னும் நிலையிலும் செயல்படுத்த நாம் முன்வரவேண்டும். தலத் திருஅவையில் பல்வேறு இயக்கங்களும், அமைப்புகளும் இணைந்து பணி பரவலாக்கத்தையும், பணி பகிர்வையும் செயல்படுத்த பங்கேற்பு என்னும் பதம் நம்மை அழைக்கிறது. எதேச்சதிகாரப் போக்கைவிடுத்து, பகிர்வுக்கு நம்மை இந்த ஆயர் மாமன்றத்தின் கருப்பொருளான கூட்டுச் செயல்பாடும் இணைந்த பயணமும் நம்மை அழைக்கின்றன.

9. ஒன்பதாவதாக முடிவுகள் தெரிந்து தெளிதலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் தரப்படுகிறது. ஆவியானவருக்கு இணைந்து செவிமடுப்பதும், ஒன்றித்து பதில் அளிப்பதும், அவரின் பாதையில் நம்மை ஒற்றுமையை நோக்கி வழிநடத்துகிறது. பங்கேற்பின்

மூலமாக பணி, செயல்பாடுகள் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை பெறுகிறோம். திறந்த மனதும், பொறுப்புணர்வும், கடமைப்பாடும் (Transperancy and Accountability) முடிவுகளை இணைந்து மேற்கொள்ள (Consultative and Deliberative) நமக்கு அழைப்பு தருகின்றன.

10. பத்தாவதாக இணைந்து பயணித்தல் கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையில் நம் குடும்பங்களை உருவாக்குகிறது. நமது சமூகங்களையும் கட்டமைக்கிறது. நமது பொறுப்புணர்வை உணர்ந்து, பிறரின் நலனையும் மையப்படுத்தி இணைந்து வாழ்வதால் நல்ல கத்தோலிக்க குடும்பங்களையும் சமூகங்களையும் நம்மால் உருவாக்க இயலும். இவ்வாறு திருஅவையில் இணைந்து வாழ்வதும், இணைந்து பயணிப்பதும் புதிய பண்பாடாகவே மாறவேண்டும்.

மேற்குறிப்பிட்ட 10 மிக முக்கிய கருத்துக்களையும் மறைமாவட்ட ஆயர்கள் ஆட்சிமன்றங்களும் மதிப்பளித்து அனைவரையும் ஒன்றிணைத்து, கடைநிலையில் உள்ளோருக்கும் செவிமடுத்து கூட்டு முடிவுகளை மேற்கொண்டு திருஅவையின் வாழ்வை இன்று புதுப்பிப்பது ஆயர் மாமன்றத்தின் கனவும், பொறுப்பும் ஆகும், இணைந்து பயணிப்போம்! இணைந்து புதுப்பிப்போம்!