ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள், தங்களின் திருப்பணி வழியாக, கடவுளின் இரக்கத்தையும், ஒப்புரவையும் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கி, இயேசுவின் அன்பின் புரட்சிக்குச் சாட்சிகளாக விளங்குமாறு, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு கிறிஸ்மசை முன்னிட்டு, உரோம் நகரிலுள்ள பாப்பிறை பெருங்கோவில்கள் மற்றும், ஏனைய இடங்களில் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்களுக்கு, அப்போஸ்தலிக் பெனிடென்ஷியரி எனப்படும் திருஅவையின் மனசாட்சி பேராயத்தின் தலைவர், கர்தினால் மௌரோ பியாசென்சா அவர்கள் டிசம்பர் 10 ஆம் தேதி வெள்ளியன்று எழுதியுள்ள மடலில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்னை மரியாவின் பாவம் ஏதுமற்ற பிறப்பின் ஒளி, புனித கிறிஸ்மசுக்கு இட்டுச்செல்லும் பாதையில், திருவருகைக்காலப் பயணத்தின் பலன்களைப் பிரதிபலிக்கின்றது மற்றும் புதுப்பிக்கின்றது என்று கூறியுள்ள கர்தினால் பியாசென்சா அவர்கள், மனிதர் அனைவரின் வாழ்வு கடினமான சூழலை எதிர்கொள்ளும் இக்காலக்கட்டத்தில், அந்த ஒளி, இதயங்களில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
“இதோ கடவுளின் செம்மறி” என்று, இயேசுவைச் சுட்டிக்காட்டிய புனித திருமுழுக்கு யோவான் போன்று, ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர்கள் அனைவரும், இந்த திருவருகைக்காலத்தில் உலகுக்கு கிறிஸ்துவின் பிரசன்னத்தைச் சுட்டிக்காட்டவேண்டும் என்று, கர்தினால், தன் மடலில் கூறியுள்ளார்.
கிறிஸ்தவ நம்பிக்கை, அந்நியக் கடவுள் அல்லது தொலைவில் இருக்கும் கடவுளை அழைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் பியாசென்சா அவர்கள், வரலாற்றுக்கு உள்ளிலிருந்தே நம்மை மீட்கும்வண்ணம், கடவுள் தம்மையே வெளிப்படுத்துவதற்கு, வரலாற்றில் நுழைந்தார் என்றும் கூறியுள்ளார்.
உலகப்போக்கு நிறைந்துள்ள இன்றைய உலகில், பலநேரங்களில் ஒப்புரவு அருளடையாளப் பணி தாக்கப்படுகின்றது மற்றும் அந்த அருளடையாளத்தின் இயல்பும் அதற்குத் தேவையான இன்றியமையாத அம்சங்களும் புரிந்துகொள்ளப்படுவதில்லை என்று உரைத்துள்ள கர்தினால், இத்தகையச் சூழலில், அவ்வருளடையாளத்தை நிறைவேற்றும் அருள்பணியாளர், இயேசு கிறிஸ்துவால் துவக்கி வைக்கப்பட்ட அன்பின் உண்மையான புரட்சியில் மட்டுமே பங்குகொள்கிறார் என்று கூறியுள்ளார்.
இரக்கம், நன்மைத்தனம், உண்மை மற்றும் நீதியில் வெளிப்படும் இந்த அன்பின் புரட்சியும், ஒவ்வொருவரின் மனமாற்றமும் கிறிஸ்துவாகிய அன்பிற்கு இட்டுச்செல்கின்றது என்றும், இத்திருவருகைக்காலத்தில் அருள்பணியாளர்கள், ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற வருகின்ற சகோதரர், சகோதரிகள் கூறுவதைக் கவனமுடனும், தந்தைக்குரிய அன்புடனும் கேட்டு, ஆறுதலின் சமயப் பாகுபாட்டிற்கு எதிராக நடவடிக்கைகள் அவசியம்