Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை
Sunday, 31 Mar 2019 05:34 am
Namvazhvu

Namvazhvu

உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 26, இச்செவ்வாய் காலை ஒன்பது மணியளவில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். திருத்தந்தையின் இந்த வருகை பற்றி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ள, இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகம், “இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகம், ஒரு சிறந்த கொடையைப் பெற்றுள்ளது, இன்று காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத் தியானத்தை வழிநடத்த, இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்திற்குத் திடீரென வருகைதந்து, எம்மை வியப்பில் ஆழ்த்தினார், பல்கலைக்கழக குழுமம், மகிழ்வுடனும், பெருமளவிலும், திருத்தந்தையின் தியான உரைக்குச் செவிமடுத்து, சிறப்பித்ததுஎன்று தெரிவித்திருந்தது.