புகழ்பெற்ற எழுத்தாளரும் எண்ணற்ற ஆங்கில நூல்களின் ஆசிரியருமான அருள்முனைவர் சி. வில்சன் C.M அவர்கள் நமது பெற்றோர் - ஆசிரியர்- மாணவர் மாத இதழான ‘கல்விச் சுரங்கம்’ என்னும் மாத இதழில் மாதந்தோறும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கமூட்டி ஆங்கிலத்தில் எழுதி வந்த எழுச்சிமிகு கட்டுரைகளை, Be Your Best Version என்ற நூலாக நிறைவு செய்தார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, சென்னை லயோலா கல்லூரியில் பல்வேறு பதக்கங்களையும் பரிசுகளையும் வென்று முத்திரை பதித்து, கடந்த 32 ஆண்டுகளாக வின்செந்திய சபையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் முதல்வராகவும் தென்னிந்திய மாநிலத்தின் மாநிலத் தலைவராகவும் திறம்பட பணியாற்றியுள்ள அருள்முனைவர் வில்சன் அவர்கள் ‘நம் வாழ்வு’ வெளியீடுகள் மூலம் இந்நூலை வெளியிட அனுமதித்து, நம் வாழ்வுக்கு பெருமை சேர்த்துள்ளார். வெளியிட்ட இரண்டே மாதங்களில் இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ள இந்நூல், ஆசிரியர்கள் - மாணவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். 20 தலைப்புகளில் தனிமனித வாழ்வியல் நெறியை மேம்படுத்த வழிகாட்டியிருக்கிறார். 160 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஐஎஸ்பிஎண் எண்ணுடன், தரமான முறையில் அச்சிடப்பட்டு, கவர்ந்திழுக்கும் கருத்தாழமிக்க அட்டைப்படத்துடன் ரூ.125 வெளிவந்துள்ளது. இந்நூலை மைசூர் ஆயர் காணிக்கைதாஸ் அந்தோனி வில்லியம் அவர்கள் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.
இந்நூலினை ‘நம் வாழ்வு’ வெளியீடு தனது 90வது நூலாக நவம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியிட்டது.