மார்ச் 18 ஆம் தேதி மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் அவர்களின் உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த கலா அகாடமியை புரோகிதர்களைக் கொண்டு வேதம் ஒதி தூய்மைப்படுத்தும் சடங்கை கோவா அரசு மேற்கொண்டுள்ளது. இதனை தட்சிண அபியான் அமைப்பினர் கடுமையாக கண்டித்துள்ளனர். தட்சிண அபியான் அமைப்பு மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பாகும். இது குறித்து கருத்த தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் தத்தா நாயக். ‘மரணம் அழகானது. உடலிருந்து வெளியேறிய ஆன்மா சுத்தமானது. உடல் அசுத்தமானது என்று எப்படிச் சொல்ல இயலும்? என்று கேள்வி கேட்டுள்ளார். கோவா கலாச்சரத்துறை அமைச்சர் கோவிந்த கவுடே இந்த சுத்திகரச் சடங்கை நியாயப்படுத்தியுள்ளார்.