Namvazhvu
குடந்தை ஞானி பிலிப்பீன்சில் மாற்றத்தை ஏற்படுத்த அருள்பணியாளர்கள் வேண்டுகோள்
Friday, 28 Jan 2022 08:42 am
Namvazhvu

Namvazhvu

பிலிப்பீன்ஸ் அரசுத் தலைவர் ரோட்ரிகோ துத்தெர்த்தே  அவர்களின் போதைப்பொருள் மீதான போரை விமர்சித்த மூன்று முக்கிய அருள்பணியாளர்கள், 2022ல் மே மாதம் நடைபெறவுள்ள அரசுத் தலைவர் தேர்தலில் ஊழல் நிறைந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசுத்தலைவர் தேர்தலில் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அவர்கள் முன்னிலையில் இருக்கும் நேரத்தில், இரட்சகர் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் மாடோ பிகார்டில், வின்சன்ட் தே பவுல் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் டேனி பிலாரியோ, இறைவார்த்தை சபையைச் சேர்ந்த பிளாவி வில்லனுவேவா ஆகியோர், ஒவ்வொரு கத்தோலிக்கரும் தங்களது அடுத்த அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தங்களுக்கு  வழிகாட்ட வரலாற்றுப் புத்தகங்களை படித்து அறிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக UCA செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது

ஏழைகள் மீது உண்மையான அக்கறை காட்டியவர் யார் என்பதை வரலாற்றுக் கணக்குகள்தான் வெளிப்படுத்தும் என்று கூறிய அருள்பணியாளர் மாடோ பிகார்டில் அவர்கள், நமக்கான அடுத்தத் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில், மக்களின், குறிப்பாக ஏழைகளின் நலன்களை உண்மையாகவே விரும்பும் உண்மையான தலைவர்களை ஆதரிப்போம் என்று மக்களிடம் விண்ணப்பித்தார்.

செல்வம், அதிகாரம் மற்றும் புகழைப் பெற விரும்பும் சுயநலம் கொண்ட ஊழல்வாதிகளை நிராகரிப்போம், என்று அழைப்பைவிடுத்த அருள்பணியாளர் மாடோ பிகார்டில் அவர்கள், இது அரசியலுக்கான ஒரு முடிவு மட்டுமல்ல, மாறாக, நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான ஒரு தேர்வு என்றும்இருளுக்கு மத்தியில் ஒளியைக் கொண்டு வருபவர்களுக்கும், இருளை நிலைநிறுத்த விரும்புபவர்களுக்கும் இடையேயான ஒரு தேர்வு என்றும் தெளிவுபடுத்தினார்.