Namvazhvu
குடந்தை ஞானி கல்வி வழி புதிய தலைமுறைகளை உருவாக்குவதில் திருஅவை
Monday, 31 Jan 2022 07:15 am
Namvazhvu

Namvazhvu

ஐவரி கோஸ்ட்டின் ஆயர்கள், 120வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் ஒன்றுகூடி உலகளாவிய கல்வித் திட்டத்தின் கட்டமைப்பிற்குள், “இளையோரை உருவாக்குவதில் திருஅவையின் பங்களிப்புஎன்ற தலைப்பில் விவாதித்து வருவதாக பீதஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

"எங்களுக்கு மிகவும் அவசரமான சவாலாகத் தோன்றுவதில் வெற்றிபெற, கல்வி என்பது இன்றியமையாத வழிமுறையாக அமைந்துள்ளது என்று பீதஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்த கோர்ஹோகோ உயர்மறைமாவட்டப் பேராயரும், ஐவரி கோஸ்ட் ஆயர் பேரவையின் தலைவருமான இக்னேஷ் பெசி டாக்போ அவர்கள், இதற்காக நன்கு சிந்திக்கப்பட்டு, உறுதியான அடித்தளத்தில் வடிவமைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் திட்டம் எமக்குத் தேவைப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்

பல்வேறு மறைமாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களின்போது, புதிய தலைமுறைகளை உருவாக்குவதன் வழியாக, நாட்டின் புதுப்பித்தலுக்கு பங்களிக்கக்கூடிய ஒரு கல்வித் திட்டத்தை செயல்படுத்துவது சம்மந்தமாக பெறப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், ஐவரி கோஸ்ட் ஆயர்கள் ஒன்றுகூடி பல மாதங்களாகப் பணியாற்றி வருகின்றனர் என்றும் பேராயர் தெரிவித்தார்

ஒரு முன்மாதிரியான சமுதாயத்தைக் கட்டமைக்கவேண்டும் என்பதிலும், முழு மனிதனையும் உள்ளடக்கிய  நல்ல கல்வியை அடைவதற்கான ஆழமான வழிமுறைகளைத் தேடுவதிலும் நாங்கள் தேர்வுசெய்துள்ள கல்வியின் மையப்பொருள் எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது என்றும் பேராயர் இக்னேஷ் பெசி டாக்போ தெரிவித்தார். ஜனவரி 30 ஆம் தேதி, வரும் ஞாயிறு வரையிலும் நடைபெறும் ஆயர் பேரவையின் இந்தக் கூட்டமானது, நற்கருணைக் கொண்டாடட்டத்துடன் நிறைவடையும் என்றும் பேராயர் தெரிவித்தார்