Namvazhvu
திருத்தந்தை பிரான்சிஸ் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ், சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்
Thursday, 03 Feb 2022 07:24 am
Namvazhvu

Namvazhvu

பெய்ஜிங்கில் முறையே பிப்ரவரி 4 ஆம் தேதி மற்றும் மார்ச் 4 ஆம் தேதி ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் தனது அன்பான வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.

பிப்ரவரி 2 ஆம் தேதி, புதன்கிழமையன்று, விசுவாசிகளுக்கு வழங்கிய தனது பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு, இப்போட்டிகளில் பங்குபெறவிருக்கும் அமைப்பாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிக்கான வாழ்த்துக்களை அனுப்புவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டால், அதன் உலகளாவிய மொழியுடன், ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் மதத்தின் மக்களுக்கு இடையே நட்பு மற்றும் ஒற்றுமையின் பாலங்களை உருவாக்க முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்

மேலும், அனைத்துலக ஒலிம்பிக் அமைப்பானது, ‘ஒன்றாகஎன்று பொருள்படும் Communiter என்ற வார்த்தையை Citius, Altius, Fortius என்ற வரலாற்று ஒலிம்பிக் பொன்மொழியுடன் சேர்த்திருப்பதை, தான் பாராட்டுவதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இப்பொன்மொழிவேகமான, உயர்ந்த, வலிமையான(faster,higher,stronger) சகோதரதத்துவ உலகத்தை வளர்க்க உதவட்டும் என்றும் கூறினார்.

கடந்த, 2021 ஆம் ஆண்டு  ஜூலை 20 ஆம் தேதியன்று அனைத்துலக ஒலிம்பிக் அமைப்பின் அமர்வு, விளையாட்டின் ஒருங்கிணைக்கும் சக்தியையும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் அங்கீகரிக்கும் வகையில் ஒலிம்பிக் பொன்மொழியில் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளக்கியது போல், இம்மாற்றத்தின்படி, "ஒன்றாக" (Communiter) என்ற வார்த்தையை Citius, Altius, Fortius என்ற வார்த்தைகளுக்குப் பிறகு சேர்த்துள்ளது,