2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ சனநாயகக் குடியரசிற்கு தம் 37வது திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதற்காக வெளியிடப்பட்ட இலட்சினையில் "அனைவரும் இயேசு கிறிஸ்துவில் ஒப்புரவாக்கப்பட்டுள்ளவர்கள்" என்ற விருதுவாக்கும் காங்கோ சனநாயகக் குடியரசின் வரைபடம், அதற்குள் வரையப்பட்டுள்ள அந்நாட்டு மஞ்சள் நிறக் கொடி, நீல நிறச் சிலுவை, திருத்தந்தை ஆசீர் வழங்குவது போன்ற அவரது உருவப்படம், அன்னை மரியா இயேசுவைத் தாங்கியிருப்பது போன்ற சிவப்பு நிற படம், இப்பூமியின் பல்லுயிர்கள், தாவரங்கள் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காங்கோ சனநாயகக் குடியரசின் கின்ஷாசா, கோமா ஆகிய இரு நகரங்களில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வார் என்றும் திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.