நாட்டின் வளர்ச்சிக்கும், பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கும் என ஒதுக்கி வைத்திருந்த நிதிகளைப் பயன்படுத்தி மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவரைக் கட்டுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டு வருவதற்கு அந்நாட்டு ஆயர்கள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய உலகிற்கு தேவைப்படுவது தடுப்புச்சுவர்களல்ல, மாறாக இணைப்புப் பாலங்களே என்ற திருத்தந்தையின் கருத்திற்கு அமெரிக்க ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்பேரவை, இச்சுவர், இரு நட்பு நாடுகளுக்கிடையே பிரிவையும், பகைமையையும் குறிப்பதன் அடையாளமாக உள்ளது என்று தங்களது அறிக்கையில் தெளிவு படுத்துகின்றனர்.