பிப்ரவரி 15 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் புலம் பெயர்ந்தோருக்காகச் சிறப்பாக நடத்திய திருப்பலியில் மற்றவர்களைச் சந்திக்கும் திறந்த மனம் பெறுவதற்கு நாம் முதலில் அச்சத்தை கைவிட வேண்டியது அவசியம் என எடுத்து ரைத்துள்ளார்.
உரோம் நகரின் வெளியே சேக்ரோபேனா என்னுமிடத்தில் திருத்தந்தை குடியேற்றத் தாரர், புலம் பெயர்ந் தோர் ஆகியோருடன் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் இம்மக்களுக் காகச் சிறப்பாகச் செபிப்பதற்கு அழைப்பு விடுத்தார். எகிப்திலிருந்து வெளியேறி வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களிடம், மோசே, அஞ்சாதீர்கள், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற கூறியதை மையமாக்கி மக்களை வாழ அழைப்பு விடுத்தார். வாக்களிக்கப்பட்ட நாடு நோக்கி பாலைநிலம் வழியே நடந்த இஸ்ரயேல் மக்கள் இறைவன்மீது முழு நம்பிக்கை வைத்தனர். நாமும் இத்தகைய மனப்பக்குவத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வோம்.