பிப்ரவரி 14 அன்று உலகில் மிகவும் வறுமை நிலையில் வாழும் மக்களிடையே பணியாற்றி வரும் வேளாண்மை முன்னேற்றத்திற்கு பன்னாட்டு நிதி என்ற நிறுவனத்தின் அனைத்து ஊழியருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய தனிப்பட்ட உரையில் உங்களுக்கு நன்றி, முன்னேறிச் செல்லுங்கள் என்று உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய உலகில் பல நிறுவனங்கள் வறுமை ஒழிப்பு என்ற முயற்சியை குறைப்பதற்கும், செல்வந்தர்களின் சொத்துக்களை அதிகரிப்பதற்கும் முயன்று வரும் வேளையில் ஐகுஹனு நிறுவனத்தினர் மிகவும் வறுமைப்பட்டோரின் துயர் துடைக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்வதற்காக இறைவனுக்கு நன்றி சொன்னார். வறியோர் நடுவே பணி செய்வதற்கு திறமை மட்டும் போதாது, மாறாக மென்மையான உள்ளமும் தேவை என்றார். இப்பணியில் மனம் தளராமல் நம்பிக்கை இழக்காமல் முன்னேறிச் செல்வது கடினம் என்பதால் முன்னேறிச் செல்லுங்கள் என்றார்.