Namvazhvu
உலகளாவிய இயேசுசபை தலைவருக்கு திருத்தந்தை கடிதம்
Wednesday, 19 Jun 2019 07:05 am

Namvazhvu

பிப்ரவரி 17 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசுசபையின் புதிய
செயல் திட்டங்கள், திருஅவையின் அப்போஸ் தலிக்க முன்னுரிமை திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2019 முதல் 2029 வரை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தவுள்ள இயேசு சபையினரின் திட்டங்கள் குறித்து அருட்பணி. சோசோ அவர்களுக்கு அதிகாரப்பூர்வமான கடிதம் அனுப்பியுள்ளார். தெளிந்து தேர்தலை ஊக்கு
வித்தல், ஆன்மிக தியானங்கள், புறக்கணிக்கப் பட்டோருடன் உடனிருத்தல், இளையோரின் பாதையில் உடனிருத்தல், பொதுவாக இல்ல
மாகிய பூமியைப்பாதுகாத்தல் போன்றவற்றை செயலாக்கம் செய்வதற்கு அழைப்பு விடுத்துள் ளார். இது ஆண்டவரோடும், தன்னோடும், குழுவோடும் செபத்திலும், தெளிந்து தேர்தலிலும் இயேசு சபையினர் உறவு கொண்டு வாழ்வதற்கு இது உதவுகின்றது என்கின்றார் திருத்தந்தை.