Namvazhvu
சிறார் பாதுகாப்புக்கு உதவும் துறவு சபைகள்
Wednesday, 19 Jun 2019 07:06 am

Namvazhvu

2019, பிப். 21 அன்று வத்திக்கானில் நடந்த திருஅவையில் சிறார் பாதுகாப்பு எனும் கருத்தரங்கிற்கு உலகளாவிய இருபால் துறவு சபைகளின் தலைவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். உலகில் பல்வேறு சூழல் களில் சிறார் பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்படுதல், புறக்கணிக்கப்படுதல், தவ
றாக நடத்தப்படுதல், போர்களில் ஈடுபடுதல் போன்றவற்றிற்கு தங்களது மறைப் பணிகளில் முக்கியத்துவம் அளிப்பதாக வாக்களித்துள்ளனர்.
நமது சமுதாயங்களில் சிறாரே மிகவும் நலிந்தவர்கள். ஏழ்மை, மாற்றுத்திறன், கைவிடப்
பட்ட நிலை, சழுதாயத்தின் விளிம்பில் வாழும்
நிலை போன்ற பல காரணங்களால் புறக் கணிக்கப்படுகின்றனர். சிறியோர் எந்த இடத்தில், எந்த நேரத்தில் தவறாக நடத்தப் பட்டாலும் அது தவறு, அதனை நியாயப்படுத்த இயலாது என்றனர்.