Namvazhvu
திருஅவையில் சிறியோர் பாதுகாப்பிற்கு சட்டங்கள்
Wednesday, 19 Jun 2019 08:35 am

Namvazhvu

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் பிப்ரவரி 21 முதல் 24 முடிய வத்திக்கானில், திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தினைப் பற்றிய கருத்துக்கள் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. திருப்பீட செயலகத்தின் மூத்த அதிகாரிகள், திருப்பீடத்
துறைகளின் தலைவர்கள், இயேசு சபை அருட்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி, காண்ஸ் ஜோல்னர், பேராயர்.
சார்லஸ், கர்தினால் ஆஸ்வால்டு கிரேஷியஸ், கர்தினால் பிளேஸ் சூபிச் போன்றோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் திருஅவையில் சிறியோரைப் பாதுகாப்பது குறித்து திருத்தந்தை. பிரான்சிஸ் அவர்கள் தனது
சொந்த விருப்பத்தினால் வெளியிடும் அறிக்கையொன்று விரைவில் வெளியிடப்படும் என்றனர். சிறியோரைப் பாதுகாப்பது தொடர்பாக உலகெங்கும் இருக்கின்ற ஆயர்களின் நீதி மற்றும் மேய்ப்புப்பணிக் கடமைகளை விளக்கும் சட்ட விதிமுறைகளை உள்ளடக்கிய நூல் ஒன்று விரைவில் வெளியிடப்படும். ஆயர்பேரவைகள் இந்த விவகாரத்தை எதிர்கொள்வதற்கு உதவுவதற்காக திறமையான வல்லுனர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றனர்.