Namvazhvu
தவக்கால மனமாற்றம் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்
Wednesday, 19 Jun 2019 08:36 am

Namvazhvu

2019, பிப் 26 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கின்றது என்பதனை தவக்கால செய்தியாக வழங்கினார்.
மனம் வருந்துதல், மனமாற்றம், மன்னிப்பு ஆகியவை வழியாக கிறிஸ்தவர்கள் தங்களது முகங்களையும், இதயத்தினையும் புதுப்பிப்பதற்கு இத்தவக்காலம் வலியுறுத்துகின்றது. இதில் அனைத்துப் படைப்புகளையும் ஈடுபடுத்தவும் அழைப்பு விடுக்கின்றது. படைப்பை நாம் விரும்புவது போல பயன்படுத்தலாம் என்ற எண்ணம் மனிதனில் பிறப்பெடுத்தலிருந்து நம்மையும், நம் அயலாரையும், ஏனைய படைப்புகளையும் அழிக்கின்ற மனிதனின் உணர்வினை அகற்றி, கடவுளோடு நல்லுறவு கொள்வதற்கு, மனித சுற்றுச்சூழவியலுக்கு அழைப்பு விடுக்கின்றார் திருத்தந்தை. பாஸ்காவை நோக்கிய இந்த ஆக்கப்பூர்வமான பாதையில் பயணம் செய்வதற்கு வரலாற்றையும், படைப்புகள் அனைத்தையும் அரவணைத்துக் கொள்வோம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அருளின் காலம் வீணாகாத படி, உண்மையான மனமாற்றத்தின் பாதையில் செல்வதற்கு கடவுளின் உதவியினை நாடுவோம். தன்னலத்தை முற்றிலுமாய் கைவிட்டுவிட்டு, தேவையில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம். பாவம் மற்றும் மரணத்தின் மீதான கிறிஸ்துவின் வெற்றியினை நாம் தெளிவான முறையினில் வரவேற்போம். நோன்பு என்பது நமது பெரும்விருப்பங்களைத் திருப்திப்படுத்தும் எல்லாச் சோதனைகளிலிருந்தும் நம்மை விலக்குவதாகும். செபம் என்பது சிலைவழிபாட்டையும், தன்னலத்தையும் கைவிட நமக்குக் கற்று தருகின்றது. தர்மம் என்பது தனக்கென வைத்திருக்கும் அறிவற்ற தன்மையிலிருந்து தப்பிப்பதற்கு உதவுகின்றது என்கின்றார்.