ஆகஸ்ட் மாதம் உக்ரைன் நாட்டிற்குச் செல்லவிருக்கும் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் நன்முறையில் இடம்பெற்று நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் மிக நம்பிக்கையுடன் இருப்பதாக பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.கூறியுள்ளார்.
பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையியின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், சுஹஐ 1 என்ற இத்தாலிய செய்திக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருத்தந்தை கனடா சென்று திரும்பியதும் கீவ் செல்வதற்கான ஏற்பாடுகள் துவங்கும் என்று கூறியுள்ள பேராயர், உக்ரைன் சென்று போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடவும், மாஸ்கோ சென்று இரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவும், திருத்தந்தை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இப்பயணத்திற்காக இரஷ்ய நாட்டுடனும் மாஸ்கோவிலுள்ள திருப்பீடத் தூதர் வழியாகவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பேராயர் காலகர் அவர்கள், திருஅவையின் ஒற்றுமைக்காக சில சிரமங்களையும், தவறான புரிதல்களையும் நாம் எதிர்கொண்டு தீர்வுகாண முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.