Namvazhvu
ஜூலை 19   புனிதர்களான ஜஸ்தா மற்றும் ருஃபீனா
Tuesday, 19 Jul 2022 13:10 pm
Namvazhvu

Namvazhvu

ஸ்பெயின் நாட்டில் புனித ஜஸ்தா 268 ஆம் ஆண்டும், ருஃபீனா 270 ஆம் ஆண்டும் செல்வத்தில் ஏழைகளானாலும், இறையன்பின் செல்வந்தர்களாக பிறந்தனர். மண்பாத்திரம் தொழில் செய்து, கிறிஸ்தவ விழுமியங்களுக்கு நற்சான்று நல்கி, அனைவருக்கும் உதவி செய்தனர். வேற்றினத்து தெய்வத்தை வழிபட்டவர்கள் தங்கள் தெய்வத்திற்கு வழிபாடு செய்ய மண்பாத்திரம் கேட்டபோது ஜஸ்தா, ருஃபீனா இரண்டு சகோதரிகளும் மறுத்தனர். வேற்றினத்தார் இவரது மண்பாத்திரங்களை உடைத்து வீட்டிற்கு தீவைத்து துன்புறுத்தினர். இறுதியில் ஆளுநன் டயோஜெனியனுஸ் முன் நிறுத்தி, கிறிஸ்துவை மறுதலிக்கக்கூறி இரும்பு கம்பியால் அடித்தனர். கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாய் இருந்ததால் சிறையில் அடைத்து, உணவின்றி துன்புறுத்தினர். ஜஸ்தா இறந்தபோது, அவரது உடலை கிணற்றில் வீசினர். ருஃபீனாவை தலைவெட்டி கொலை செய்தனர்.