புனித பிரான்சிஸ் சொலேனா ஸ்பெயினில் 1549 ஆம் ஆண்டு, மார்ச் 10 ஆம் நாள் பிறந்தார். இயேசு சபை துறவிகளிடத்தில் கல்வி கற்று ஒழுக்கத்திலும், செபத்திலும் வளர்ந்தார். 20 ஆம் வயதில், பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். நற்கருணை முன் நீண்டநேரம் செபித்தார். தவ முயற்சிகளால் இறைவனை மாட்சிப்படுத்தி, குருவானார். அவர் வாழ்ந்த பகுதியில் தொற்றுநோயால் அவதியுற்ற மக்களை காப்பாற்ற, தன்னை அர்ப்பணித்தார். இறந்தவர்களை நல்லடக்கம் செய்தார். தொற்றுநோய் பாதித்தபோது, இறை வல்லமையால் நலமடைந்தார். மக்கள் அவரை வாழும் புனிதர் என்றனர். லா ரியோஜோ என்ற இடத்தில் 9,000 பேருக்கு திருமுழுக்கு கொடுத்தார். வயலில் புழு இருந்தபோது, உழவர்களால் அவற்றை வெளியேற்ற முயன்றும் இயலாமல் கலங்கி நின்றனர். பிரான்சிஸ் வயலுக்கு சென்று அப்புழுக்களிடம் அங்கிருந்து போக கூறியபோது, புழு அகன்றது. தவ ஒறுத்தல்கள், செபம் உழைப்பு வழி நற்செய்தி அறிவித்து, 1610 ஆம் ஆண்டு, ஜூலை 4 ஆம் நாள் இறந்தார்.