புனித பெரிய யாக்கோபு இயேசுவின் சீடர்களில் ஒருவர். பெத்சாய்தா ஊரைச் சார்ந்த செபதேயு, சலோமி இவர்களுடைய மகன். இயேசுவின் அழைப்பை ஏற்று, அவருடன் தங்கி அவரது போதனைகளை கேட்டார். மற்ற சீடர்களைவிட வயதில் மூத்தவராக இருந்ததால் பெரிய யாக்கோபு என்று அழைக்கப்படுகிறார். இயேசுவின் உருமாற்றத்தை நேரில் கண்டார். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின், ஸ்பெயின் நாட்டில் உள்ள இபெரியன் பகுதியில் இயேசுவுடன் உடனிருந்ததும், பயணித்ததும், போதனைகளை கேட்டதும், பார்த்ததும் அறிவித்தார். ஸ்பெயின் நாட்டில் வடபகுதியில் சரகோசாவில் ஒரு தூணில் நின்று அன்னை மரியா இவருக்கு காட்சிக்கொடுத்து, “உங்களை நான் எப்போதும் பாதுகாப்பேன், கைவிடமாட்டேன், உடனிருப்பேன் என்பதன் அடையாளமாக இங்கே ஓர் ஆலயம் கட்டு” என்றார். 42 ஆம் ஆண்டு, ஏரோது அக்கிரிப்பா யாக்கோபை வாளால் வெட்டி கொலை செய்தார்.