புனித அல்போன்சா கேரளாவில் 1910 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் நாள் பிறந்தார். பிறந்த 3 ஆம் மாதத்தில் தாயை இழந்தார். இறையன்பால் இதயத்தை நிறைத்து ஆனந்தமுற்றார். புனித சூசையப்பர், அன்னை மரியாவிடம் நாளும் செபித்தார். மனத்தூய்மை, அழகு, அமைதி, பொறுமை வழி அனைவரின் மனம் கவர்ந்தார். உலக சிற்றின்பங்களை துறந்து புனித கிளாரா சபையில் சேர்ந்தார். 1930, மே 19 ஆம் நாள் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வாக்குறுதி வழி இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். வாழ்வின் சிலுவைகளை சுகமாய் சுமந்தார். பொருள், பணம், பதவிகளை மறந்தார். எல்லாரிடமும் அன்பும், மரியாதையும் செலுத்தினார். குறை கூறும்போது வாய்மூடி நின்றார். ஒப்புரவு, திருப்பலி, செபமாலை, திருஇருதய செபம், நற்கருணை ஆராதனை, சிலுவைப்பாதை, இறைஇரக்க செபம் ஆகியவைகளை ஆர்வமாய் செய்தார். சபையின் ஒழுங்குகளை பின்பற்றி தூயவரானார். 1946, ஜூலை 28 ஆம் நாள் இறந்தார்.