புனித மார்த்தா பெத்தானியாவை சேர்ந்தவர். மரியா, லாசர் என்பவர்களின் சகோதரி. யதார்த்தமாகப் பேசக்கூடியவர். இயேசுவினால் அதிகம் அன்பு செய்யப்பட்டார். மார்த்தா விருந்தோம்பலுக்கும், உபசரிப்புக்கும் சான்றாக வாழ்ந்தார். ஆண்டவர் இயேசு மார்த்தா, மரியா வீட்டிற்கு சென்றபோதெல்லாம் மார்த்தா அன்பும், அக்கறையும், பற்றும் கொண்டு அவருக்கு விருந்தளித்து, பணிவிடை செய்தார். மார்த்தா உலக காரியங்களில் அக்கறைக் கொண்டவராக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். தனது சகோதரன் லாசர் இறந்த வேளையில் இயேசு இல்லாததை நினைத்து, கண் கலங்கினார். இயேசுவிடம் தனது துக்கங்களை பகிர்ந்து கொண்டார். ஆண்டவராகிய இயேசுவை மெசியாவாக நம்பி, அனைவருக்கும் நம்பிக்கையின் சாட்சியாக மாறினார். இவர் உதவியாளர், சமையல் செய்வோர், இல்லத் தலைவியர் ஆகியோரின் பாதுகாவலர்.