அன்பார்ந்த ‘நம் வாழ்வு’ வாசகரே, வணக்கம். ‘நம் வாழ்வு’ வார இதழ் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு டிஜிட்டல் முறையிலும் வெளிவந்து, இளைய தலைமுறையையும் சென்றடைகிற விதத்தில் முத்திரைப் பதித்து வருகிறது. ஃபிளிப்ஸ்நாக் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ஈ-புக் முறையில் ஒவ்வொரு வாரமும் நம்முடைய இணைய தளமான www.namvazhvu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டுவிட்டர் தளங்களிலும் அதனுடைய இணைப்பு கொடுக்கப்பட்டு அனைவரையும் மிக எளிதில் சென்றடைகிறது.
தற்போது அடுத்தக்கட்டமாக, உங்கள் ஸ்மார்ட் போன்களில் ‘நம் வாழ்வு’ இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், கூகுள் பிளே ஸ்டோரில் Namvazhvu என்ற ஆன்ராய்டு ஆப் இடம்பெற்றுள்ளது. கோவை எக்ஸ்ப்ளோவிஸ் மென்பொருள் நிறுவனத்தாரின் உதவியுடன் இம்முயற்சி வெற்றிப்பெற்றுள்ளது. உலக அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கென்று நிறுவப்பட்டுள்ள தமிழ் செய்தி ஆப் Namvazhvu என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் செய்திகள் அதில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. உங்கள் உள்ளங்கையில் நம்ம ‘நம் வாழ்வு’ இடம்பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
‘நம் வாழ்வு’ சந்தாதாரர்கள் அனைவருக்கும் அழகான ‘நம் வாழ்வு’ID கார்டு தயாராகிக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் அவை உங்களுக்கு அஞ்சல் செய்யப்படும். இன்றே கூகுள் ப்ளே ஸ்டோரில் Namvazhvu என்று டைப் செய்து இந்த ஆன்ட்ராய்டு ஆப்பை டவுன் லோடு செய்து உதவுங்கள். இது முற்றிலும் விலையில்லா சேவை.