புனித இஞ்ஞாசியார் ஸ்பெயினில் 1491, டிசம்பர் 27 ஆம் நாள் பிறந்தார். 26 ஆம் வயதில் ஸ்பெயின் நாட்டு அரசவையில் போர் வீரரானார். 1521 இல், பம்பலூனா கோட்டையைப் பிரெஞ்சுகாரரிடமிருந்து காப்பாற்றும் போரில், அவரது கால்கள் ஊனமுற்றன. ஓய்வு எடுத்தபோது விவிலியம், புனித பிரான்சிஸ் அசிசியார், புனித சாமிநாதர் போன்றவர்களின் சரிதையைப் படித்து மனந்திரும்பினார். 1522, மார்ச் 25 ஆம் நாள், அன்னை மரியா வழி இயேசுவுக்கு தன்னை அர்ப்பணித்தார். குருவாக அருள் பெற்று படித்தோருக்கும், பாமரருக்கும் நற்செய்தி போதித்தார். தவறிய பெண்களுக்கு வழிகாட்டி, நோயுற்றோரை நலமாக்கினார். ஒருநாள் 7 மணிநேரம் இறைவனோடிருந்தார். 1534, ஆகஸ்ட் 15 ஆம் நாள் இறை இயேசுவின் சேவகர்கள் சபை தொடங்கினார். இதயத்தில் இயேசுவை சுமந்து அயலானின் மீட்புக்காகவும், இறைவனின் அதி உன்னத மகிமைக்காகவும், இறையாட்சி பணி செய்து, 1556 ஆம் ஆண்டு, ஜூலை 31 ஆம் நாள் இறந்தார்.