Namvazhvu
திருத்தந்தை 12 ஆம் பயஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 வது ஆண்டு
Thursday, 20 Jun 2019 05:04 am

Namvazhvu

மார்ச் 2 அன்று திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள் உரோமன் கத்தோலிக்க திருஅவையின் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் 80 வது
ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது. 
1939 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி திருத்தந்தையாக தெரிவு செய்யப்பட்ட திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள், உலக அமைதிக்காக அயராது உழைத்தவர். இரண்டாம் உலகப்போரின் கொடுரங்களை சந்தித்
தவர். சிதறுண்டு துன்புற்ற உலகிற்கு
கிறிஸ்துவின் ஒளியைக் கொணர்ந்தவர். மீள்கட்டமைப்பின் நம்பிக்கையை உருவாக்கியவர். 1943 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி உரோம் நகர் குண்டுமழையால் இருண்டிருந்த சமயத்தில் திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை உதறித்தள்ளி விட்டு, வத்திக்கானை விட்டு வெளியேறி அச்சத்தில் உறைந்து போயிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார். பத்தொன்பது ஆண்டுகள் திருஅவையை மிகச் சிறப்பாக வழிநடத்தினார். பாத்திமா அன்னை மரியா காட்சியை கண்ட அருட்சகோதரி. லூசியாவை பலமுறைச் சந்தித்து பேசிய திருத்தந்தை, 1940 ல் பாத்திமா காட்சிகளை அங்கீகரித்தார். 1950 ம் ஆண்டு அன்னை மரியாவின் விண்ணேற்பு விசுவாச சத்தியத்தை அறிவித்த திருத்தந்தை, புனித பிரான்சிஸ் அசிசி, புனித சியன்னா கத்ரீன் ஆகிய இருவரையும் இத்தாலி யின் பாதுகாவலர்களாக அறிவித்தார்.