ஆண்டவரோடு 24 மணிநேரங்கள் என்ற செப முயற்சிக்கு உதவுகின்ற நோக்கத்தில் புதியவழியில் நற்செய்தி அறிவிப்பு திருப்பீடஅவை ’நானும் தீர்ப்பு அளிக்கவில்லை’ என்ற தலைப்பில் மேய்ப்புப்பணி கையேடு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
’ஆண்டவரோடு 24 மணிநேரங்கள்’ என்ற செபமுயற்சி யின் மையப்பொருள் மன்னிப்பு. இந்தச் செபமுயற்சிக்கு உதவியாக மார்ச் 29 ஆம் தேதி மாலை முதல் மார்ச் 30 ஆம் தேதி முழுவதும் அனைத்து ஆலயங்களும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அனைத்துப் பங்குத்தளங்களும், திருஅவை குழுமங்களும், துறவற சபைகளும் இந்த செப
முயற்சியினை சிறப்பாக நடத்துவதற்காக இது வெளியிடப் பட்டுள்ளது. இச்செப முயற்சியில் நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருளடையாள வழிபாடுகளில் விசுவாசிகள் அனைவரும் கலந்திட வேண்டும்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தப் பக்தி முயற்சி யினை மார்ச் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் தலைமையேற்று நடத்துவார். மார்ச் 30 ஆம் தேதி அனைத்து ஆலயங்களும் திறந்தே வைக்கப்பட்டிருக்கும்.