Namvazhvu
பொறுப்பிலுள்ளோர் மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்
Thursday, 20 Jun 2019 05:06 am

Namvazhvu

மார்ச் 3 அன்று திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, ஏனையோருக்கும் கற்பிக்கும் பொறுப்பிலுள் ளோர்கள் குறிப்பாக, ஆன்மிக மேய்ப்பர்கள், அரசு அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோர் தங்களது கடமையை உணர்ந்து, மக்களை நல்வழியில் நடத்திச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மற்றவர்களின் குறைகள் குறித்து அதிகம் அசைபோடுதல், புறங்கூறுதல் போன்ற பழக்க வழக்கங்களைக் கைவிட்டுவிட்டு, தங்கள் பாவங்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்த கத்தோலிக்கர்கள் அதிகம் முன்வர வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இறப்பிற்குப் பின்பு பாவக்கழுவாய் தேடும் இடமாக உத்தரிக்கும் தலத்தில் துன்புறுவதை விட, இவ்வுலகிலே நம் பாவங்களை உணர்ந்து ஏற்றுக்கொள்வது நலம் பயக்கும். ’நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்’ என இயேசு கூறியதைச் சுட்டிக்காட்டி, நமது குறைகளைக் காண மறுத்து, பிறர் குற்றங்களை ஆராய்ந்து பார்ப்பதிலே வல்லுனர்களாக  இருக்கின்றோம். ஆதலால்,  நாம், அதையும் தாண்டி நல்லதைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.