Namvazhvu
மனமாற்றம் காண்போம் 24.03.2019 தவக்காலம் மூன்றாம் ஞாயிறு
Thursday, 20 Jun 2019 05:30 am

Namvazhvu

கிறிஸ்து இயேசுவில் இனியவர்களே,
மனித மனம் நிலையற்றது:
மாறிக் கொண்டே இருக்கும்
இயல்புடையது. நமது கொள்கை கள், கருத்தியல்கள், இலக்குகள், இலட்சியங்கள், மனப்பாங்குகள் போன்றவற்றில் எப்போது வேண்டு
மானாலும் எப்படி வேண்டுமானா
லும் மனமாற்றம் நிகழலாம். பழையனவற்றைப்  புறக்கணித்து விட்டு,  புதியனவற்றை மிக எளிதாக நாம் ஏற்றுக் கொள்ளலாம். எனவே மனம் ஒரு குரங்கு என்று ஒப்பிடுவர். இந்த வகையான மனமாற்றம் இவ்வுலகைச் சார்ந்தது; மேலோட்டமானது.
இன்றைய நற்செய்தியில்,
ஆண்டவர் இயேசு மனமாற்றத்
திற்கான அழைப்பை விடுக்கின் றார். மனம் மாறாவிவிடில், நாம்
சந்திக்கவிருக்கும் பேரழிவை நம் மனக்கண்  முன் கொண்டு வந்து,  அன்பொழுக அறிவுறுத்துகின் றார். ஆனால்,  நம்மிடம் இயல்பாக நிகழும் மேலோட்ட மான மனமாற்றத்தை அல்ல, மேலானவற்றை நாடும் மன மாற்றத்தையே  இயேசு விரும்பு கின்றார். சாக்குப் போக்குகளால் நம்மை நியாயப்படுத்திக் கொண்டு
வாழும் பாவ வாழ்வைத் துறந்து விட்டு, இறைவனின் அன்புக் கட்டளைகளுக்கேற்ப  வாழும் புது வழியைக் காட்டுகின்றார்.
மனமாற்றம்தான், மனிதர் களை மாமனிதர்களாகவும் புனிதர்
களாகவும் மாற்றுகிறது. நாமும்,
பாவ குணங்களால் இறுகிப்
போன நம் மனத்தை செபம்
மற்றும் நோன்பால் தளர்த்து
வோம். திருஅவை வழங்கும்
இந்த நல்வாய்ப்பு களைப் பயன்படுத்துவோம். இறை
வனின் சட்ட திட்டங்களை
திறந்த மனதுடன் கடைப்பிடித்து,
பிறரன்புப் பணிகளில் ஈடுபடு
வோம்.  அதற்கான அருள்வரங் களை, இத்திருப்பலியில் இறைஞ்சுவோம்.
முதல் வாசக முன்னுரை:
விடுதலைப்பயணம் 3:1-8,13-15
இஸ்ரயேல் மக்களை மீட்ப
தற்காக, ஆண்டவர் மோசேயைத் தேர்ந்தெடுக்கிறார்.  எரியும் முட்
புதரில் ’இருக்கிறவர் நாமே’ என்று தன்னை வெளிப்படுத்தி, தம் பணியைச் செய்ய அழைப்பு விடுக்கிறார். இறைவனின் மாட்சி
யும் அவர் தம் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் ஒரு
சேர அந்த இடத்தில் வெளிப்
படுகிறது. இவற்றையெல்லாம் விளக்கும் விடுதலைப்பயணத்தி லிருந்து எடுக்கப்பட்டுள்ள  முதல் வாசகத்திற்கு கவனமுடன் செமடுப்போம்.
பதிலுரைப்பாடல் திபா 103:
1-2, 3-4, 6-7, 8,11 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்
இரண்டாம் வாசக முன்னுரை:  1 கொரிந்தியர் 10:1-6,10-12
இஸ்ரயேல் மக்களை இறைவன், மோசே வழியாகப்  பாலைநிலத்தில் வழிநடத்தினார். அவர்களின் எல்லாத் தேவை
களையும் அவர் நிறைவு செய்தார். ஆயினும் ஒருசிலர் அவருக்கு
உகந்தவர்களாக இருக்கவில்லை. எனவே அவர்கள் தண்டனைப் பெற்றார்கள். இவற்றை எடுத்துக் கூறி, நம்மை அக்கறையுடன் எச்சரிக்கும்  புனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதிய இரண் டாம் வாசகத்திற்கு  கவனமுடன்  செவிமடுப்போம்.
நற்செய்தி லூக்கா 13: 1-9
மன்றாட்டுகள்
1. அனைத்தையும் பராமரிக்கும் தந்தாய்! 
திருஅவையை வழி நடத்தும் எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ்,  ஆயர்கள், இருபால் துறவிகள், திருநிலையினர் அனைவரின் உள்ளத்திலும் உமது பேரன்பையும் பரிவிரக்கத் தையும் நிறைவாய் பொழிந்து நாங்கள் இறையரசைக் கட்டி யெழுப்பும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. பேரன்பின் பிறப்பிடமே  தந்தாய் ! 
அன்பின்மையால் உல
கில் உருவாகியுள்ள அனைத்துத் தீமைகளும் முடிவுக்கு வரவும், இறையன்பும் பிறரன்பும் மக்களி டையே பலுகிப் பெருகவும், துன்பங்கள் நீங்கி எங்கும் மகிழ்ச்சி பிறக்கவும் வரமருள உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
3. குடும்பங்களைக் கட்டி யெழுப்பும் தந்தாய் !
நாசரேத்துத் திருக் குடும்
பம் வாழ்ந்துக் காட்டிய அதே
நெறியை, நாங்களும் கடை பிடித்து, எங்கள் குடும்பங் கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்குச் சுயநலமற்ற அன்பும் அடுத்திருப்பவருடன் உறவு
பாராட்டுகின்ற நல்ல உள்ளங் களையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
மன்னித்து இறைவா!
தவக் காலத்திலிருக்கும் நாங்கள், எங்களைத் தன்னாய்வுச்
 செய்து செபம், உண்ணா நோன் பால்  எங்களை ஒடுக்கி எங்கள் மனமாற்றத்தைப் பிறரன்புச் சேவைகளில் வெளிக்காட்டிடத்  தேவையான  அருள்வரங்களைத் உம்மை மன்றாடுகிறோம்.  
புதுவாழ்வு வழங்கும் தந்தாய் !
குடிவெறி, சாதிப் பாகு பாடு, கதாநாயகர்கள் வழிபாடு, நுகர்வுவெறி,  வரதட்சணை, ஊழல் போன்ற சமூக நோய் களில் சீக்கிச் சீரழிந்து கொண் டிருக்கும் எம் சமூகத்தை கண்
ணோக்கும். இந்தக் கொடிய நோய்களை ஒழித்து, வளமான புதிய சமூகம் படைக்க ஏதுவான
உள்ளொளியை எம் எல்லாருக்
கும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.