மத்திய இத்தாலியின் லிஅகுயிலா நகரின், கொலிமாஜியோ அன்னை மரியா பசிலிக்கா வளாகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 28, 29 ஆகிய தேதிகளில் செலஸ்டின் மன்னிப்பு என்ற பெயரில் சிறப்பிக்கப்படுகின்றது. அப்பசிலிக்காவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறும் திருப்புகழ்மாலை வழிபாட்டிலிருந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை இப்புனிதக் கதவு வழியாகச் செல்பவர்களுக்கு நிறைபேறு பலன்கள் உண்டு. இப்பலன்களைப் பெறுவதற்கு, ஒப்புரவு அருளடையாளம் பெற்று, திருப்பலியில் பங்குகொண்டு, திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்கவேண்டும்.
அப்பசிலிக்காவில் புனிதக் கதவு வழியாகச் செல்பவர்களுக்கு நிறைபேறு பலன்கள் பெறும் சலுகையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.