சுற்றுலாவை ஊக்குவித்து அதன் வழியாக மாநிலத்தின் வருவாயை அதிகரிக்கும் எண்ணத்தில் வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயா சூதாட்டத்தை அறிமுகப்படுத்துவதை, ஊக்குவிப்பதை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எதிர்த்து வருகின்றனர்.
மாநில முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அரசாங்கம் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க காசினோ போன்ற சூதாட்டங்களை சட்டபூர்வமாக்க முயற்சி எடுத்து வருகிறது. இதற்கான ஆணையையும் பிறப்பித்து இருக்கின்றது. இது குறித்து ஷில்லாங் உயர்மறை மாவட்டத்தின் முதன்மை குரு ரிச்சர்ட் அவர்கள் இது மாநிலத்தில் ஒழுக்கக்கேடு, குற்றத்தை அதிகரிக்க வழி வகுக்கும் என்று கூறியுள்ளார். பேராயர் விக்டர் அவர்கள் “சூதாட்டத்தை சட்டபூர்வமாக்குவது குடும்பத்திலும், சமூகத்திலும் அமைதியை அழித்து பிளவை உண்டாக்கும்” என்று UCA செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இது குறித்து தாங்கள் மாநில முதலமைச்சரை சந்தித்ததாகவும் அவரிடம் சூதாட்டத்தை ஊக்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.