Namvazhvu
அருள்தந்தை பாபு ஜோசப் கருகலைப்பு சட்டத்திற்கு எதிராக இந்தியத் திரு அவை
Friday, 14 Oct 2022 09:28 am
Namvazhvu

Namvazhvu

திருமணமாகாத பெண்கள் கருவுற்று, அக்கருவை அவர்கள் கலைப்பதற்கு விரும்பினால் அதை தாராளமாக செய்து கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்திய கத்தோலிக்க திரு அவையானது எதிர்த்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இதே தீர்ப்பை 75 பக்க அளவில் உச்சநீதிமன்றம் வழங்கிய போதும் இந்திய கத்தோலிக்க திரு அவை இதை எதிர்த்தது. திருமணமாகாத பெண்கள் கருவுற்றால் அவர்கள் அந்தக்  கருவை 20 முதல்  24 வாரங்களுக்குள் கரு கலைப்பு செய்து கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்றும் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் பலாத்காரம், திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டவர்கள் கருவுற்றால் அவர்கள் கருவை 20 முதல்  24 வாரங்களுக்குள் கலைத்துக் கொள்ள முழு உரிமை இருக்கிறது என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பளித்தது.

இது குறித்து இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முன்னாள் செய்தி தொடர்பாளர் அருள்தந்தை பாபு ஜோசப்உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது உண்மையாகவே வருத்தத்தை தருகிறது. இது ஒரு குழந்தையின் எதிர்காலத்தை, அது வாழும் உரிமையை பறிக்கிறது. அப்பெண்ணை மட்டும் அல்ல; மற்றொரு உயிரையும் கருத்தில் கொள்ள வேண்டும்என்று கூறியுள்ளார். கேரள கத்தோலிக்க ஆயர் மன்றமானதுஇது உண்மையாகவே கவலைக்குரிய ஒரு தீர்ப்பு. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றுஎன்று கூறியுள்ளது.