மார்ச் 10 அன்று எத்தியோப்பிய நாட்டின் அட்டிஸ் அபாபா நகரிலிருந்து கென்யாவின் நைரோபி நகர் நோக்கிப் புறப்பட்ட எத்தியோப்பிய விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலே விபத்திற்குள்ளாகி 157 பேர் உயிரிழந்தனர். இத்துயரமான சம்பவத்திற்கு திருத்தந்தை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தினரோடு திருஅவையும் எப்போதும் உடனிருக்கும் என்கின்றார்.
மார்ச் 10 முதல் 15 வரை நடைபெறும் ஆண்டு தியானத்தில் கலந்து கொண்ட திருத்தந்தை இத் துயரமான செய்தி கேட்டு, திருஅவை மக்களைச் செபிக்கு மாறு அறிவுறுத்தியுள்ளார். எத்தியோப்பியத் திருஅவை தேவையான எல்லா நிவாரணங்களையும் வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.