ஒவ்வோர் ஆண்டும் திருத் தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட
அதிகாரிகளும் தவக்காலத்தின் முதல் வாரத்தில் தங்களது ஆண்டுத் தியானத்தை மேற்கொண்டு வரும் வழக்கத் தின்படி மார்ச் 10 அன்று உரோம் நகருக்கருகே அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப்போதகர் தியான இல்லத்தில் புனித பெனடிக்ட் சபையின் துறவி. அருட்பணி பெர்னார்தோ ஐயீயான்னி அவர்கள் தலைமையில் தியானம் ஆரம்பமாகியது.
இந்த ஆறுநாள் தியானத்தில் புதியதொரு வரலாறு இவ்வுலகில் படைக்கப்பட வேண்டும் என்பது இறைவனின் திட்டமாக இருக்க, வானகத்தில் இருப்பது போல, இவ்வுலகிலும் இறையரசு வரவேண்டும் என்ற ஆவலுடன் இப்பணியினை செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையான கடமை என குறிப்பிட்டுள்ளார். தூய ஆவியார் வகுத்துள்ள இத்திட்டம் கட்டியெழுப்பப்படுவதற்கு, அவர் நம்மில் புளிக்காரமாக செயல்படுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளார். இவ்வுலகை அழிவுக்கு கொண்டுவரும் தவறானப் படிப்பினைகள் எனும் பெரும் நெருப்புக்கு எதிராக நம்முள் மூட்டப்பட்டுள்ள சிறுதீபமானது தூண்டப்பட வேண்டும். அன்பு மற்றும் நம்பிக்கையின் நகராக எருசலேம் அக்காலத்தில் உருவாக்கப்பட்டதைப்போன்று. இன்றைய உலகின் நகரங்கள் அனைத்தும் அதே வழியில் அமைதி, அழகு, செபத்தின் நகரங்களாக மாற ஆவல் கொள்ள வேண்டும் எனத் திருத்தந்தை கேட்டுகொண்டார்.