Namvazhvu
சீனாவில் மதஉரிமை மதிக்கப்படுவதில்லை
Thursday, 20 Jun 2019 05:59 am

Namvazhvu

சீனாவில் ஹாங்காங் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதர் சாம் பிரவுன்பெக் அவர்கள் சீனாவில் மதஉரிமை மதிக்கப்படுவதில்லை என்ற தனது கருத்தினைப் பதிவுசெய்தார்.
மதத்தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தை தனது கையில் வைத்து கொண்டு செயல் படும் சீன அரசின் போக்கினையும் மிக வன்மையாகக் கண்டித்தார். இதற்குப் பதில் கருத்து தெரிவித்த
சீன அமைச்சகம், அமெரிக்கத் தூதரின் கருத்து, முன்சார்பு எண்ணங்களையும், விரோத மனப்
பான்மையையும் உள்ளடக்கி யுள்ளது. சீனாவில் திபெத்தியர்கள் உட்பட அனைத்து இனம் மற்றும் மதங்களைச் சார்ந்தவர்கள் முழு மதச் சுதந்திரத்தை அனுபவிப்பதாகத் தனது கருத்தினை பதிவு செய்தது.