Namvazhvu
The Eloquence of a Stutterer அருட்பணி. அருள் லூர்து அவர்களின் மறையுரை நூல்
Monday, 07 Nov 2022 10:17 am
Namvazhvu

Namvazhvu

ஜெர்மனியில் உள்ள ஃபிரெய்பெர்க் உயர்மறைமாவட்டத்தில் பணிபுரியும் அருட்பணியாளர் அருள் லூர்து அவர்கள் தான் எழுதிய The Eloquence of a Stutterer என்ற வாராந்திர மற்றும் ஞாயிறு மறையுரைச் சிந்தனைகள் அடங்கிய இருநூல்களையும் அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து அவருக்குப் பரிசளித்து மகிழ்ந்தார். லெய்மன் லோக்கல் என்னும் யூடியூப் சேனலில் ஒவ்வொரு வாரமும் கத்தோலிக்க மறையுரை சிந்தனைகளை வழங்கி வரும் அருட்பணி.அருள் லூர்து அவர்கள், ஜெர்மன் வாழ் கத்தோலிக்கர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர். ஜெர்மன் மொழியில் சிந்தனை வழங்கி, எல்லாரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் தம் சிந்தனைகளில் இந்திய - தமிழக மரபையும் கலாச்சாரத்தையும் ஆன்மீகத்தையும் உள்ளடக்கி, மறையுரைகள் வழங்கும் விதமே அலாதியானது. அப்படி தாம் வழங்கிய மறையுரை சிந்தனைகள் அனைத்தையும் ஆங்கில மொழியில் தொகுத்து வெளியிட்டுள்ள இந்த இருநூல்கள் தொகுப்பு திரு அவைக்கும் மறையுரையாளர்களுக்கும் இறைமக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும். அருள்முனைவர் மதுரை ஆனந்த் அவர்களின் உடன் பிறந்த சகோதரரான அருட்பணியாளர் அருள் லூர்து அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்து இந்நூல்களை அவருக்குப் பரிசளித்து அவர்தம் ஆசியைப் பெற்றுள்ளார். ஏப்ரல் ஏழாம் தேதி மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களால் சாந்தோம் பேராலய வளாகத்தில் வெளியிடப்பட்ட 650 பக்கங்கள் கொண்ட இவ்விருநூல்களும் ரூ.600க்கு கிடைக்கும்.

 தொடர்புக்கொள்க  arul.lourdu@gmail.com